ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏ ராமலிங்கபுரம் கிராமத்தில் மொத்தம் 1016 வாக்குகள் உள்ளன. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காதால் அவர்கள் பெயர் வாக்காளர் அடையாள அட்டையில் இல்லை
எனவே அவர்களுக்கு நேற்று அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்குகள் செலுத்த அனுமதி இருந்தும் சுமார் 200 பேருக்கு வாக்களிக்க அனுமதி இல்லை என்ற காரணத்தினால் தாங்களும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி அந்தப் பகுதியில் திரண்டனர்.
நேரம் செல்ல செல்ல பொது மக்களின் கூட்டம் அதிகமானது அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது மேலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை எனவே வாக்காளர் அடையாள அட்டை எங்களுக்கு எதற்கு என்று கூறி சிலர் சாலையில் எறிந்தனர்
இது பற்றி தகவல் கருத்துடன் திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர் மேலும் சிவகாசி சப் கலெக்டர் விசுவநாதன் உதவி தேர்தல் அதிகாரி கணேசன் தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர் மலர் பாண்டியன் உட்பட அதிகாரிகள் எ ராமலிங்கபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
மேலும் திரண்டு இருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடத்தி வாக்களிக்க இயலாதவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்
மேலும் சுமார் 200 பேர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரண்டு இருந்த பொதுமக்களிடம் எடுத்து கூறினர் இதனை அடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சமாதானம் அடைந்தனர்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறி வாக்காளர் வாக்களிக்காத முடியாதவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க உரிமை உள்ளவரிடம் சேர்ந்து நேற்று சுமார் 3 மணி நேரம் ஓட்டு போடாமல் சாலையில் திரண்டிருந்தது ஏ ராமலிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.