பாரீர்!பாரீர்!
ஃ பாசிச அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை அலட்சியப்படுத்தி, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் திராவிட மாடல் அரசின் அவலத்தைப் பாரீர்.
- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தேர்தலை புறங்கணித்துள்ளனர்.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே அம்மக்கள் ‘நோ ரோட், நோ வோட்’ என்ற வாசகத்துடன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கின்றனர்.
5.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கை தொடர்பாக எஸ். எரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கடவர்ஹள்ளி கிராமம், கருக்கனஹள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லாததால் தேர்தலை புறக்கணித்தனர்.
- அன்னூர் அருகே கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதூர் கிராமங்கலில் குடிநீர் இல்லாததால் தேர்தலை புறக்கணித்தனர்.
- முத்துப்பேட்டையை அடுத்த முனகாடு கிராமத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்யாததை கண்டித்தும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கின்றனர் அக்கிராம மக்கள்.
- திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜா பேட்டையில் உள்ள பொதுமக்கள் விளைநிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கின்றனர்.
- திண்டுக்கல் மாவட்ட சின்ன அயன்குள பகுதி மக்கள் கறுப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.
மேற்கண்டவை ‘மாதிரி’ தான். இன்னும் எண்ணற்ற பகுதிகளில் தமிழக கிராம மக்கள் தி மு க அரசின் கையாலாகாத்தனத்தினால், அலட்சிய நிர்வாகத்தினால், அதிகார துஷ்பிரயோகத்தினால், தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் தி மு க வின் ஆட்சியில் தமிழகமெங்கும் மக்கள் படும் துயரங்களின் சிறு துளிதான் இது என்றால் மிகையாகாது.
மக்களை பற்றி கவலைப்படாத அரசு, சட்ட மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு நிர்வாகம், ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாருமே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில், தங்களின் ஜனநாயக கடமையை, உரிமையை மக்கள் நிறைவேற்ற மறுப்பது இந்த திராவிட மாடல் அரசின் படு தோல்வியை பறைசாற்றுகிறது.
மக்களிடம் வாக்குகளை பெற்று பெரும் ஊழல் செய்து செல்வச்செழிப்பில் மிதக்கும் அரசியல்வாதிகள், மக்களின் அடிப்படை தேவைகளை தூக்கி எறிவது ஜனநாயக, மக்கள் விரோதம்.
என்று தணியும் மக்களின் தாகம்? என்று முடியும் தமிழனின் ஏக்கம்?
- நாராயணன் திருப்பதி