இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகள் முஹம்மது இர்பான் (34). கூலித்தொழிலாளியான இவர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து தனது குடும்பத்தினருடன் அம்பாசமுத்திரம் அருகே செட்டிமேடு அதிகள் முகாமில் வசிக்கும் உறவினர் செல்வராஜா என்பவரது வீட்டிற்கு ஆக.2 இல் வந்தனராம்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை முஹம்மது இர்பான் தனது மனைவி ஜூட்மேரி ஜசி, மகள்கள் இஷானா, இஸ்ரா ஆகியோருடன் ஆலடியூர் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஆற்றில் குளிக்கும் போது இர்பானா ஆழமான பகுதிக்குச் சென்றாராம். அவரை மீட்கச் சென்ற முஹம்மது இர்பானும் நீரில் தத்தளித்த நிலையில் ஜூட் மேரி ஜசி இருவரையும் மீட்க முயன்ற நிலையில் முடியவில்லையாம்.
இதையடுத்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிடுத்ததையடுத்து தீயணைப்பு மீட்புப் படையினர் முஹம்மது இர்பான் உடலை இறந்த நிலையில் மீட்டனர். மேலும் நீரில் மூழ்கிய இஷானா உடலை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.