ஏப்ரல் 21, 2021, 5:35 மணி புதன்கிழமை
More

  விருது பெற்ற புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வாழ்த்து!

  சிறந்த ஆசிரியர்(2020) விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி நேரில் அழைத்து வாழ்த்தினார்

  pudukkottai-education-news
  pudukkottai-education-news

  புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த ஆசிரியர்(2020) விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி நேரில் அழைத்து வாழ்த்தினார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் தாயுள்ளம் புக் ஆப் வேர்ல்ட் அச்சீவர்ஸ் நிறுவனமும் இணைந்து சமூகப்பணியில் அக்கறையுடன் செயல்படும் ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பல்துறைக் கலைஞர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

  அதன்படி, தமிழ்நாட்டில் 160-க்கும் மேற்பட்டவர்களை சாதனையாளர்களாகத் தேர்ந்தேடுத்து விருது 2020 வழங்கி சிறப்பித்து கௌரவித்தது. அதில் , புதுக்கோட்டை அசோக்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பழனிச்சாமி, ஆசிரியர் சமீம்பானு, மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மகேஸ்வரன்.

  சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலமையாசிரியர் விஜயமாணிக்கம், ராயவரம் எஸ்.கே.டி. காந்தி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பூமிநாதன் ஓரியன்டல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம், மணவிடுதி பள்ளி ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் சிறந்த ஆசிரியர் விருது – 2020 பெற்றுள்ளனர்.

  விருது பெற்றவர்களை புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் பொன்னழகு மற்றும் ஆசிரியர்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துராஜா, டாக்டர் சலீம் மற்றும் ரெனிவல் அறக்கட்டளை முனைவர் வீரமணி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள்,சமூக சேவகர் விருது பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • செய்தி: டீலக்ஸ் சேகர்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »