முதல்வர் நலம்பெற வேண்டி வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரணகுணம் அடையவேண்டி 108 அகல்விளக்கு ஏற்றியும், 108 தேங்காய் விடலை போட்டும் தரிசனம்செய்தனர். இளைஞர்மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மு.சேர்மபாண்டியன் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளஅரசு, கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்