May 8, 2021, 4:00 pm Saturday
More

  சாக்கடைகளின் சங்கமமான திமுக.,வின் கழிவுப் பொருள் ஆர்.எஸ்.பாரதி: வைகைச்செல்வன் காட்டம்!

  வாரிசுக்கெல்லாம் நாங்களா ஏற்பாடு செய்ய முடியும் என்றெல்லாம் அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதியை

  rsbharathi
  rsbharathi

  திமுக., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறித்து தனது பதிலடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அதிமுக., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்.

  சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற திமுக., கூட்டத்தில், வழக்கம் போல் வரம்பு மீறிப் பேசினார் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. திமுக., மேடை என்றாலே அறுவறுக்கத்தக்க பேச்சுக்களை அள்ளி வீசும் இடம் என்பதை எப்போதும் மெய்ப்பித்து வருகிறார் ஆர்.எஸ்.பாரதி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும் சாக்கடைத் தமிழே அக்கட்சியின் பிம்பம் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டும்.

  ஆர்.எஸ்.பாரதி, ஊடகவியலாளர்கள் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் பேசியதெல்லாம் அத்தகைய சாக்கடைத்தனம் தான் என்றாலும், இவர்களிடம் நல்ல தமிழை எதிர்பார்க்க முடியுமா என்ன? என்பதாக எண்ணிக் கொண்டு, மேற்படி இரு துறைகளும் தங்களைப் பற்றிய விமர்சனத்தை கண்டும் காணாமல் காதை மூடிக் கொண்டு தங்கள் அன்றாட வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டன. ஜனநாயகத்தின் வலிமையான இரு தூண்களே அப்பால் சென்ற பிறகு, சாமானியன் மட்டும் ஆர்.எஸ்.பாரதி போன்ற திமுக., சாக்கடைப் பேச்சாளர்களை விமர்சித்து அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவா போகிறார்கள்?!

  இதனை வெளிக்காட்டும் வகையில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் கூறியபோது, தி.மு.க.,வின் கழிவுப் பொருள் ஆர்.எஸ்.பாரதி. கழிவுப் பொருளில் இருந்து துர்நாற்றம்தான் வீசும். சந்தனம், ஜவ்வாது என நல்ல மணம் வீசாது. இப்படிப்பட்ட சாக்கடைகளின் சங்கமமான திமுக.,வில் இருந்து கொண்டுதான் ஆர்.எஸ்.பாரதி அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை மேடைகளில் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.

  கொரோனா பாதிப்பு என்று காரணம் காட்டி வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களின் நாக்கை அறுத்து விடும் அளவுக்கு எங்கள் கட்சியிலும் ஆட்கள் பேசத் துடிக்கின்றனர். ஆனால் நாகரிகம் கருதி அமைதி காக்கின்றனர்… என்றார் வைகைச்செல்வன்!

  வைகைச்செல்வன் என்று மட்டுமில்லை… அதிமுக.,வினர் பலரும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர். அதற்குக் காரணமாய் அமைந்ததுதான் அம்பத்தூர் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசிய அசிங்கப் பேச்சு.

  திமுக.,வே வாரிசு அரசியலில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆண்மை இல்லாத அடிவருடிகள் பரம்பரைக் கொத்தடிமைகளாக சேவகம் செய்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு, அதிமுக.,வை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் திமுக.,காரர்களுக்குக் கிடையாது என்கின்றனர் அதிமுக., விசுவாசிகள்.

  அதிமுக., அமைச்சர்களும் முதலமைச்சர் எடப்பாடியும் தலையசைத்திராவிட்டால், திமுக.,வை தன் குடும்பக் கட்சியாக்கி வைத்திருக்கும் கருணாநிதியின் சமாதி சென்னை மெரினாவில் அமைந்திருக்காது… அறிவாலய இடுகாட்டில் அமைக்கக் கூட திமுக.,வினர் விட்டிருக்க மாட்டார்கள், எங்கோ மூலையில் கேட்பாரற்ற இடத்தில் அமைந்திருக்கும் … அன்று மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு இடம் கேட்டு, நாய் மாதிரி அலைந்தவர்கள், இன்று எடப்பாடியாரை அதே வார்த்தைகளால் வசை பாடுகின்றனர் என்று உள்ளம் குமுறுகின்றனர் அதிமுக.,வினர்.

  அதற்குக் காரணம் ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சு தான். இந்தக் கூட்டத்தில், பழனிசாமி., என்ன செஞ்சி இருக்காரு தெரியுமா? டேபிளுக்கு ரெண்டு கால் இருக்குது. அந்த காலுக்கு நடுவுல புகுந்து, அந்தம்மா கால்ல போய் விழுந்துட்டான். யாருடைய உதவியால, முதல்வர் நாற்காலியில உட்கார்ந்து இருக்கோம்ங்கறதையே அந்த நாய் மறந்துடுச்சு… என்று முதலமைச்சர் எடப்பாடியை வசை பாடியது அதிமுக.,வினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும், எம்.ஜி.ஆரை விசுவாசம் இல்லாமல் ஏமாற்றியவன், அதனால் தான் கடைசிக் காலத்தில் பேச முடியாமல் போச்சு… என்றும், ஜெயலலிதா மூதேவி என்றும், இவங்களுக்கு வாரிசு இல்லை… வாரிசுக்கெல்லாம் நாங்களா ஏற்பாடு செய்ய முடியும் என்றெல்லாம் அறுவறுக்கத்தக்க வகையில் பேசிய ஆர்.எஸ்.பாரதியை அதிமுக.,வினர் இப்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,165FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »