வெற்றிநடை போடும் தமிழகமே.. வாசகத்துடன் வைரலாகும் முதல்வரின் போட்டோ!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
eps-1
eps-1

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

திமுக, அதிமுக என ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அது ஒரு மணற் சிற்பம். மாமல்லபுர கடற்கரையில் எடப்பாடியாரை மணற்சிற்பமாக வடிவமைத்துள்ளனர். அப்படியே அச்சு அசல் அவரை போலவே உருவம் மணலால் சிற்பமாக்கி உள்ளனர். இதனை 160 அடி உயரத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.

அதற்கு பக்கத்திலேயே “வெற்றிநடை போடும் தமிழகமே” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன்,
“எடப்பாடியார் 2021” என்ற வார்த்தையும் உள்ளது. இதுதான் அப்படியே போட்டோக்களாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அதிமுகவினர் இந்த போட்டோவை ஷேர் செய்து வருகிறார்கள். அதேபோல எடப்பாடியார் 2021 என்ற வார்த்தை எதிர்க்கட்சியினரையும், அமமுகவினரையும் உருத்தி கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.