தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

சற்றுமுன் தமிழகம்
meteorological centre
meteorological centre

வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் 11ஆம் தேதி முதல் 3 நாட்கள் வெப்பநிலை இயல்பை விட3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்குள் கோவை, நீலகிரி, தேனியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.