covaxin-1
covaxin-1

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக கோவாக்சின் தடுப்பூசி மருந்தை அனுப்பவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி மருந்தை வழங்கி வரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களின் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு மருந்தின் இருப்பு அடிப்படையில் 24 மணி நேரமும் மாநிலங்களுக்கு அனுப்ப உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், ஆந்திரா, அசாம், சட்டிஸ்கர், தில்லி, குஜராத், காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கோவாக்சின் தடுப்பூசி கேட்டு அந்நிறுவனத்திடம் விண்ணப்பித்திருந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending