
14வது ஐபிஎல் சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இந்த சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இன்னும் 30 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது ? எங்கு ? நடத்தப்படும் என்று கேள்வி எழுந்தது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் தில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் அவசர கூட்டத்தை நடத்தி உடனடியாக ஐபிஎல் தொடரை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
ஐபிஎல்லில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஸ்டாப்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மக்களிடையே எவ்வாறு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவிந்திர ஜடேஜாவும் ஒரு விடியோ தயார் செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஜடேஜா ‘எல்லாரும் வீட்டில் இருங்க, பாதுகாப்பாக இருங்கள். உங்களது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். இந்த சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்ல வேண்டும்.
தொடர்ந்து மாஸ்க் மற்றும் சானிடைசரை பயன்படுத்துங்கள். உங்களை சுற்றி இருக்கின்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
We are one and we shall overcome as one!
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) May 7, 2021
Kindly #StayHomeStaySafe .#MaskPodu #Yellove 🦁💛 @imjadeja pic.twitter.com/EHi1CYifbX