
பயங்கரவாத வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்த சென்னையில் NIA அமைப்புக்கு புதிய அலுவலகம் திறக்கப்படுகிறது. இதற்கென அதிகாரிகளும் நியமிக்கப்படுகின்றனர்
தமிழகத்தில் சில ஆண்டுகளாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் என்.ஐ.ஏ., என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்து வருகின்றனர்
இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு மதுரையில் அத்வானியை கொல்ல பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளையும் என்ஐஏ அமைப்பினர் திறம்பட கையாண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். இருப்பினும் இதுகுறித்த வழக்கு விசாரணையை கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டுவரும் என்ஐஏ அதிகாரிகளே நடத்தி வந்தனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு வழக்கு விசாரணைகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையில் தேசிய புலனாய்வு பிரிவு கிளை அலுவலகத்தை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தது … அதற்கான அனுமதியை உள்துறை தற்போது வழங்கியுள்ளது. இதையடுத்து சென்னையில் விரைவில் என்ஐஏ அலுவலகம் அமைகிறது
சென்னை கிண்டியில் தற்போது என் ஐ ஏ அலுவலகம் தற்காலிகமாக ஒரு சில அதிகாரிகளுடன் செயல்பட்டு வருகிறது அங்கேயே புதிய கிளை அலுவலகம் தொடங்கப் பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான கட்டடங்களில் புதிய அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள என்ஐஏ அதிகாரிகளின் இரண்டு குழுக்கள் சென்னையில் முகாமிட்டு உள்ளது
சென்னையில் அமைக்கப்படும் என்ஐஏ கிளை அலுவலகத்தில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் சென்னையில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்ட பிறகு என்ஐஏ விசாரணை தற்போது நடை பெறுவதை காட்டிலும் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை, இம்பால், ராஞ்சி ஆகிய 3 இடங்களில் புதிதாக என் ஐ ஏ கிளைகள் அமைப்பதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது இது இந்த பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தவும் உதவியாக இருக்கும்
தற்போது என்ஐஏ அலுவலகத்திற்கு ஒன்பது கிளைகள் உள்ளன. கௌஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னௌ, ராய்ப்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில் என் அலுவலகத்துக்கு கிளைகள் உள்ளன. இதன் தலைமையகம் புதுதில்லியில் செயல்பட்டு வருகிறது தற்போது புதிதாக மூன்று கிளைகள் திறப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்புக்கு 12 இடங்களில் கிளைகள் இருக்கும்!