அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார்.இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும், 2026ஆம் ஆண்டு பாமக தலைமையிலான ஆட்சியை அமைப்போம் என்றும் அதற்கான வியூகங்களை 2024-ல் வகுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.