கார் மோதி எலக்ட்ரீசியன் பலி- மருத்துவக் கல்லூரி மாணவர் கைது..

Published:

சீர்காழி அருகே கார் மோதி எலக்ட்ரீசியன் பலியான வழக்கில் மருத்துவக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாபாளன் கோவில் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோசம் மகன் டேவிட் கிருபாகரன் (35) எலக்ட்ரீசியன். இவர் பைபாஸ் சாலையில் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் டூவீலரில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே டேவிட் கிருபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் இது குறித்து டேவிட் கிருபாகரனின் மனைவி ஜெய சுபாங்கி அளித்த புகாரின் பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துகாரை ஓட்டி வந்த காரைக்கால் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி, படித்து வரும் சேலம் மாவட்டம் கோனூர் பாலகிருஷ்ணன் மகன் சச்சின்.(27)என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

images 52 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img