அதிருப்தியில் அதிமுக தலைகள்..! தூண்டில் போடும் திமுக., அமமுக!

அ.தி.மு.க.,வில் அமைக்கப்பட்ட லோக்சபா குழுக்களால் அதிருப்தி உருவாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் பேச, தொகுதி பங்கீட்டுக் குழுவில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அமைப்பு செயலர், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இவர்களில், கே.பி.முனுசாமி, பிரபாகர் ஆகியோர், பன்னீர் அணி

தேர்தல் அறிக்கை குழுவில், அமைப்பு செயலர்கள், பொன்னையன், விஸ்வநாதன், செம்மலை, மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், ஜெயகுமார், சி.வி.சண்முகம், முன்னாள் எம்.பி., 
ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

முதல் நான்கு பேரும், பன்னீர் ஆதரவாளர்கள்.

தேர்தல் பிரசாரப் பணிக் குழுவில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, அமைச்சர்கள்,சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், மருத்துவ அணி செயலர், வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அனைவரும், பழனிசாமி ஆதரவாளர்கள்.

தொகுதி பங்கீட்டு குழுவில், இடம் அளிக்கப்படாதது, தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோருக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பன்னீர் அணியில், அ.தி.மு.க., – பா.ஜ., இடையில் உறவுப் பாலமாக இருந்தவர், ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன். 2001, 2006, 2011 சட்டசபை தேர்தல்கள்; 2004, 2009, 2014 லோக்சபா தேர்தல் களில், கட்சி யின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார்.

அவருக்கு, இம் முறை எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இதனால், அவரும் கடும் அதிருப்தியில் உள்ளார்.

அ.தி.மு.க.,வில், தகவல் தொழில்நுட்ப அணி துவக்கப்பட்டபோது, மாநில செயலராக, அஸ்பயர் சுவாமிநாதனை, ஜெயலலிதா நியமித்தார். 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில், அவரது பங்களிப்பு பெரிதாக இருந்தது.

இம்முறை அவருக்கு எந்த வாய்ப்பும் அளிக்கபட வில்லை. பன்னீர் அணியில் இருந்த அவர், கட்சியில் இருந்து ஒதுங்கும் முடிவிற்கு வந்துள்ளார். தன் ஆதங்கத்தை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் கொட்டியுள்ளார்.

அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு மட்டும், கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுவது, மற்ற அமைச்சர்களுக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தி யில் உள்ளவர்களை இழுக்கும் பணியில் டிடிவியின் அ.ம.மு.க. இறங்கி உள்ளது.

திமுகவும் தூண்டில் போடும்?

  • ‘தராசு’ ஷ்யாம்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...