ஆர்கே நகர் டோக்கன் சிஸ்டம் அரவக்குறிச்சியில் எடுபடவில்லை: எம் ஆர் விஜய பாஸ்கர்!

பேட்டியின் போது, அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்

கருத்துக்கணிப்புகள் பற்றி கவலையில்லை, வாக்களிக்கும் பொதுமக்களும், அ.தி.மு.க தொண்டர்களும், கூட்டணி கட்சியினரும் எங்களோடு இருக்கின்றனர் என்று கூறினார் எம் ஆர் விஜயபாஸ்கர்

ஏற்கனவே 20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தினை ஆர்.கே.நகரில் அறிமுகப்படுத்திய செந்தில் பாலாஜியின் டோக்கன் சிஸ்டம் அரவக்குறிச்சியில் எடுபடவில்லை என்று கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றார் அவர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவானது 9 மணிக்கு 10.51 விழுக்காடும், 11 மணி அளவில் 34.24 விழுக்காடும், அதில் ஆண்கள் தான் அதிகமாக வாக்களித்து வந்ததாகவும், பெண்களின் வாக்குப் பதிவு குறைந்ததாகவும் ஏற்கனவே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டிய நிலையில், அவர் புகார் அளித்ததை அடுத்து ஆங்காங்கே தி.மு.க வினரால் சிறை பிடிக்கப்பட்டிருந்த பெண் வாக்காளர்கள் அவர்களாகவே வெளிவந்தனர்.

இந்நிலையில், 5 மணி நிலவரப்படி மொத்தம் அரவக்குறிச்சி தொகுதியில் ஆண்கள் 75 ஆயிரத்து 630 வாக்காளர்களும், 87 ஆயிரத்து 534 பெண் வாக்காளர்களும் மொத்தம் 79.49 விழுக்காடாக பதிவாகியிருந்தன.

இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 6 மணிக்கே, வாக்குப்பதிவு அனைத்து வாக்குச் சாவடிகளில் முடிந்த நிலையில், புஞ்சைபுகளூர், அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளிலும், ஈசநத்தம் உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் டோக்கன் வழங்கப்பட்டிருந்து

வாக்குப்பதிவு 8 மணியளவில் முடிவடைந்தது. மொத்தம் அரவக்குறிச்சி தொகுதியில் 84.33 விழுக்காடு வாக்குப்பதிவினை தொடர்ந்து 81 ஆயிரத்து 143 ஆண் வாக்காளர்களும், 91 ஆயிரத்து 972 பெண் வாக்காளர்களும் மொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து 115 வாக்குகள் பதிவாகின,

இந்நிலையில், ஏற்கனவே கார்வழி பகுதியில் தி.மு.க வினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் அடித்து தி.மு.க வினர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ததை அ.தி.மு.க வினர் காவல்துறையினரிடமும், தேர்தல் அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்த நிலையில், தோல்வி பயத்தில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க வேட்பாளருமான செந்தில் பாலாஜி என்ன, என்னவோ, கூறி வருகின்றார் என்று மதியமே, செய்தியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

இந்நிலையில், இன்று இரவு அ.தி.மு.க கரூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.

அப்போது எங்களது அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதன், சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே ஆர்.கே.நகரில் ஒருவரை ஜெயிக்க வைக்க, ரூ 20 நோட்டு டோக்கன் சிஸ்டத்தினை கொடுத்தது இந்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் எடுபடவில்லை என்றும், அந்த தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு தற்போது தோல்வி பயம் கண்டுள்ள நிலையில், எதேதோ கூறி வருகின்றார் என்றும் கூறினார்.

23 ம் தேதி அவர் கட்சி ஆட்சிக்கு வரப்போகின்றது என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகின்றார் செந்தில் பாலாஜி. மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் எப்போதும் அ.தி.மு.க விற்கு தான் வாக்களிப்பார்கள்  ஏற்கனவே ஆட்கடத்தல் வழக்கு, குட்ஹா வழக்கு, போலி சாராய தயாரிப்பு வழக்கு ஆகியவற்றில் பெயர் போன அவருக்கு மக்கள் தகுந்த பாடத்தினை கூறியுள்ளனர்.

ஆகவே, தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சரியான பாடத்தினை புகட்டியுள்ளனர்.

கருத்துக்கணிப்புகள் பற்றி கவலையில்லை. மக்களும், அ.தி.மு.க தொண்டர்களும் எங்களோடு இருக்கின்றார்கள் என்றும் கூறினார் அவர்.

பேட்டியின் போது, அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் மற்றும் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...