December 6, 2025, 2:02 AM
26 C
Chennai

ருஷி வாக்கியம் (30) – இறைவனுக்கு விருப்பு வெறுப்பு உண்டா?

agni1 - 2025

இறைவன் சிலருக்கு அருளுகிறான். சிலர் மேல் கோபத்தை காட்டுகிறான் என்று நாம் சாதாரணமாக நினைப்பதுண்டு. ஆனால் ஒருவர் மேல் அன்பும் மற்றொருவர் மேல் வெறுப்பும் இறைவனுக்குக் கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் இறைவன் நிர்விகாரன். பிரபஞ்சம் முழுவதற்கும் சமமாகவே அருள் புரிகிறான்.

ஆனால் சிலர் மகிழ்ச்சியோடும் சிலர் துயரத்தோடும் இருப்பது எதனால்? இறைவனால்தான் எல்லாம் நடக்கிறது என்கிறபோது சிலரை மகிழ்விப்பவனும் அவனே! சிலரைத் துயரத்தில் ஆழ்த்துபவனும் அவனே! இவ்வாறு நாம் எண்ணுவது தவறு. ஆனால் இறைவன் சுகதுக்கங்களை அளிக்கிறான் என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் நினைப்பது போல் அன்பினாலும் துவேஷத்தினாலும் அவன் அவ்வாறு செய்வது கிடையாது. இறைவனுக்கு விருப்பு வெறுப்பு என்ற குணங்கள் இல்லை.

“நான் வெறுக்கக் கூடியவன் யாருமில்லை!” என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறான். அதே விதமாக யாரிடமும் அவனுக்கு பிரத்தியேகமான அன்பும் கிடையாது. ராகமும் கிடையாது. துவேஷமும் கிடையாது. இரண்டுமற்றவன் இறைவன்.

அவ்வளவு தூரம் ஏன்? பகவானை உபாசனை செய்யும் யோகிகளுக்குக் கூட விருப்பு வெறுப்புகள் இருக்காது. அப்படியிருக்க இறைவனுக்கு இருக்குமா, என்ன? பின் இறைவன் அவதாரங்கள் எடுத்து சிலரை சிட்சிப்பதும் மற்றும் சிலரை ரட்சிப்பதும் எதனால்? இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இவ்விரண்டையும் சமன்வயம் செய்து இறை தத்துவத்தை வியாக்கியானம் செய்தவர்கள் பல அம்சங்களை கூறியுள்ளார்கள்.

குந்திதேவி இறைவனை துதி செய்கையில், “இறைவா! உனக்கு ஒருவரிடமும் விருப்பமோ வெறுப்போ கிடையாது. ஆனால் மனிதர்கள் தம்மிடமுள்ள விபரீத புத்தியின் காரணமாக உன்னிடமும் அதே பாவனை இருப்பதாகக் காண்கிறார்கள்” என்று கூறுகிறாள்.

இறைவனை ‘கர்மபல ப்ரதாதா’ என்கிறோமல்லவா? இதன் பொருள் என்ன? அவரவர் செய்த வினைப் பயன்களுக்கு தகுந்தாற்போல் இறைவன் வினையாற்றுகிறான். உதாரணத்திற்கு சூரிய ஒளி அனைவருக்கும் சமமாகக் கிடைக்கிறது. ஆனால் சூரிய கிரகணத்தைப் பெறும் கண்ணாடி அதனைத் திரும்பப் பிரதிபலிக்கிறது. பாறாங்கல்லின் மேல் பட்ட கிரணம் அதனை பிரதிபலிக்காது. அப்படி இருக்கையில் சூரியன் பாறாங்கல்லிடம் வேறு விதமாகவும் கண்ணாடியிடம் வேறு விதமாகவும் நடந்து கொள்கிறான் என்று கூற இயலுமா? அந்தந்த பொருட்களின் இயல்புக்கு தகுந்தாற்போல் சூரியனின் ஒளிக் கிரணங்கள் வினையாற்றுகின்றன. அதேபோல் ஜீவிகளின் கர்மபலனைப் பொருத்து இறைவன் அவர்களிடம் வினையாற்றுகிறான். அவ்வளவுதானே தவிர யாரிடமும் பிரத்தியேகமான பாவனை அவனுக்குக் கிடையாது.

கதவைத் திறந்து வைத்தவன் சூரிய ஒளியின் மூலம் வெளிச்சத்தைப் பெறுகிறான். கதவை மூடி வைத்தவன் சூரிய ஒளியைப் பெறாமல் இருளில் இருக்கிறான். கதவை மூடி வைத்தவனுக்கு நான் சூரிய ஒளியை வழங்க மாட்டேன் என்று சூரியன் ஏதாவது பிடிவாதம் பிடித்தானா என்ன? இல்லை அல்லவா!

இறைவனின் கிருபை அனைவரிடமும் சமமாகப் பொழிந்தாலும் அவரவர் சம்ஸ்காரத்தை பொருத்து அதன் பலனை அனுபவிக்கிறார்கள். அதாவது இறைவன் கர்மபலனை அளிப்பவனே தவிர யாரிடமும் விருப்போ வெறுப்போ அவனுக்குக் கிடையாது.

ஒரு அரசன் பரிபாலனை செய்யும் போது பிரஜைகளில் தர்மத்தோடு நடந்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அளித்து, அதர்மச் செயல் செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கிறான். அதைக் கொண்டு அரசனுக்கு சிலரிடம் அன்பும் சிலரிடம் வெறுப்பும் உள்ளது என்று கூற இயலாது அல்லவா? தான் அரசாட்சி செய்யும் தேசத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அதர்மம் செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கிறான். தர்மத்தோடு செயல்படுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறான். தன் தேச நலனுக்காக அவ்வாறு செய்கிறான்.

அதேபோல் சகல புவன அதிபதியான பரமாத்மா லோக க்ஷேமத்திற்காகவும் தர்மத்தைக் காப்பதற்காகவும் அதர்மத்தை அழித்து தர்மத்தை ரட்சிக்கிறான். ஆனால் தண்டிக்கப்பட்டவர்கள் கூட சிறிது சிறிதாக நல்லவர்களாக மாறி சத்கதியைப் பெறுகிறார்கள்.

அரசாட்சி செய்யும் அரசன் அதர்மச் செயல் செய்பவர்களை சிட்சித்து அருள் செய்கிறான். தர்ம செயல் செய்பவர்களை இரட்சித்து அருள் செய்கிறான். இரண்டும் அனுக்கிரகத்தின் பாகங்களே!

அதேபோல் சகல ஜெகதீஸ்வரனான பரமாத்மாவும் நடந்து கொள்கிறான். கிருஷ்ண பரமாத்மா போன்ற அவதாரங்களின் போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தோடு அவனை அணுகினார்கள். அவனிடம் சரண் அடைந்தவர்களுக்கு எண்ணங்கள் இருக்கலாமே தவிர அவர்கள் யாரை சரணடைந்தார்களோ அந்த பரமாத்மாவுக்கு எந்த எண்ணமும் கிடையாது. யார் யார் எந்தெந்த பாவனையோடு அவனை வணங்கினார்களோ அவரவர் வினைக்கேற்ப அருள் புரிகிறான் பரமாத்மா!
agni2 - 2025

எரியும் நெருப்பின் ஒளியை கொண்டு ஒருவன் புத்தகம் படிக்கிறான். மற்றொருவன் அந்த நெருப்பின் வெப்பத்தைக் கொண்டு சமையல் செய்து சாப்பிடுகிறான். மற்றொருவன் அந்த நெருப்பில் தன் விரலை வைக்கிறான். அக்னி அந்த மூன்று பேரிடமும் மூன்று விதமாக நடந்து கொள்ளவில்லை. அதனை உபயோகிப்பவர்களே மூன்று விதமாக உள்ளார்கள். தீயில் விரலை வைக்கச் சொல்லி அக்னி கூறியதா? விரலைச் சுட வேண்டுமென்று அக்னி சங்கல்பம் செய்யவில்லை. அதே அக்னியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தவன் அதனிடமிருந்து ஒளியைப் பெற்று பாடம் படிகிறான். இன்னொருவன் அதனிடமிருந்து வெப்பத்தைப் பயன்படுத்தி சமையல் செய்கிறான். அதாவது அக்னியின் பயன்களை அவரவர் பெறும்போது அக்னி ஒருவருக்கு சமைத்துத் தர வேண்டும் என்றோ, படிக்க ஒளி தர வேண்டும் என்றோ விரலைச் சுட வேண்டும் என்றோ நினைக்கவில்லை.

அதேபோல் இறைவன் எப்போதுமே நடுநிலை வகிப்பவனாக இருக்கிறான். அவரவர் வினைப் பயனைப் பொறுத்து அவர்களுக்குத் தகுந்த பலன்களை அவரவர் பெறுகிறார்கள்.

இந்தக் கருத்தையே நாரதரும் தர்மபுத்திரனிடம் விவரிக்கிறார். “ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவனையோடு பரமாத்மாவை அணுகுகின்றனர். யார் எந்த உள்ளத்தோடு அவனை வணங்குகிறார்களோ அவர்களுக்கு அதே பாவனையோடு பகவான் அருள் புரிகிறான்”.

கீதையில் பகவான் கூறியதன் உட்பொருள் கூட இதுவே! எனவே ஒவ்வொருவருக்கும் இறைவன் வெறும் ‘கர்மபல ப்ரதாதா’ வாக இருக்கிறானே தவிர அவனுக்கு விருப்பு வெறுப்பு கிடையாது என்பதை அறிய வேண்டும்.

இதே கருத்தை பிரம்ம சூத்திரத்தில் கூட “நைர்குண்யமோ வைஷம்யமோ இறைவனுக்குக் கிடையாது” என்று போதித்துள்ளார்கள். ‘நைர்குண்யம்’ என்றால் ‘நிர்தயை’ என்று பொருள். வைஷம்யம் என்றால் பகை, வெறுப்பு என்று பொருள். தயையின்றி இருப்பதென்பது இறைவனிடம் கிடையாது. அவன் எப்போதும் தயை வடிவானவன்.

ஆனால் சிலரை தண்டிக்கிறானே என்று கேட்டால் அது கூட தயையின் ஒரு பாகமே என்று அறிய வேண்டும். அதனால் இறைவன் தயை, கருணை, பிரேமையோடு எப்போதும் நடுநிலையாக இருப்பவனே தவிர அவனுக்கு யாரிடமும் பகை கிடையாது.

பகை, வெறுப்பு எல்லாம் மனிதனிடமும் அசுரனிடமும் அவர்களின் குணங்களில் காணப்படுமே தவிர கடவுளிடம் கிடையாது. இதனை அறிந்து கருணையின் வடிவமான இறைவனின் உண்மையான தத்துவத்தை புரிந்து கொண்டு நாம் உயர்வடைவோமாக!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories