தமிழ் மாநில காங்கிரஸ் கரூர் மேற்கு மாவட்ட தலைவராக புதிதாக பொறுப்பேற்ற திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து முன்னாள் எம்பி நாட்ராயன் அரசியல் உயர்மட்ட குழு தலைவரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கரூர் ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் நகரத் தலைவர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் ராமசாமி நகரத் துணைத் தலைவர் முருகேசன் வடக்கு நகர தலைவர் சிங்காரம் மற்றும் முத்துக்குமார் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.