
முதல்வரின் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அவமானப்படுத்தப்பட்ட பத்திரிகையளர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி, முதல்வரின் சொந்த தொகுதியான
கொளத்தூரில் வசிக்கும் ஏழை எளிய கிறிஸ்தவ மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திரு வி க நகரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மேடையின் வலது புறம் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இடம் ஒதுக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் அமர இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை
வழக்கமாக மேடையின் முன்புறம் தான் பத்திரிகையாளர் அமர்ந்து விசுவல் மற்றும் புகைப்பட்டம் எடுக்க இடம் ஒதுக்குவது வழக்கம் . ஆனால் இந்த முறை மேடையின் வலது புறம் ஒரு ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டு விஷுவல் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தில் தான் உங்களுக்கு விசுவல் அவுட் கொடுக்கிறோமே.. ஏன் இங்க வந்து உயிரை வாங்குறீங்க என்று அலட்சியமாக திமுகவினரும் காவல்துறையினரும் சொல்லி கடுப்பேத்தியுள்ளனராம்.
ஆளுங்கட்சி சேனல் மட்டும் எடுத்துக் கொடுக்கும் விசுவல் தான் அனைத்து சேனல்களும் பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் குரல்வலையை நெரிப்பதற்கு சமம் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்