spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryரா - உளவு அமைப்பை சிதைப்பதில்... ‘காட்டிக்கொடுத்த’ அன்சாரியின் ‘கை’ !

ரா – உளவு அமைப்பை சிதைப்பதில்… ‘காட்டிக்கொடுத்த’ அன்சாரியின் ‘கை’ !

- Advertisement -

ரா – உளவுத்துறை: முதல்ல உளவுத்துறை ஆபீஸர்கள் எல்லோரும் நம்ம வடிவேலு.. ஒசாமாட்ட பேசுறியா அதிகாரி மாதிரி இருக்க மாட்டார்கள். வத்தலாக அல்லது.. மிகவும் சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். போலீஸ் கட், நல்ல பைசப்ஸ்.. இப்படி இருந்தா சாதாரண ஆசாமிக்கும், அசாதாரணமான சந்தேகம் வரும்.

இந்த ஹமீத் அன்சாரி பற்றி முதன் முதல்ல.. சொன்னது R K யாதவ் என்கிற RAW அதிகாரி. அவர் பொஸ்தகத்துல நிறைய மேட்டர் இருக்கு. அதில் மிக முக்கியமான விஷயங்களை சொல்லிட்டு.. அன்சாரிக்கு போகிறேன்..

1995 இல் ஆறு வெளிநாட்டு டூரிஸ்டுகளை ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்தினார்கள். RAW வின் ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்.. துல்லியமான தகவலை தலைமையகத்திற்கு அனுப்பியது. ஆனால் இதை பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்க காலம் தாழ்த்தப்பட்டது.

பிரதமர் நரசிம்ம ராவ் தெற்கில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு.. திரும்பி.. நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டபோது.. தீவிரவாதிகள் இடம் மாறிவிட்டிருந்தனர். ஆனால் இவர்களை பிடித்த அல்-ஃபரான் கும்பல் பிணைக் கைதிகளில் அனைவரையும் போட்டுத் தள்ளிவிட.. ஒருவர் மட்டும் தப்பி வந்தார்.

ஒன்பது நாட்களுக்கு பின்.. பிணைக் கைதிகளை பிடித்த தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. இவர்கள் வைத்த கோரிக்கை மசூத் அசார் என்கிற தீவிரவாதியை விடுதலை செய்ய.. ஆனால் வைத்த கோரிக்கை தோல்வியில் முடிந்தது..

24/12/1999 IC-814 விமானம் கடத்தப்படலாம்னு.. முதலில் சொன்னது சிங் என்கிற அதிகாரி. இந்தக் கடத்தலுக்கு முன், ஐந்து தினங்களுக்கு முன்னரே, இந்த தகவலை.. தன் சீனியர் ஆசாமியிடம் தெரிவித்தார். அந்த சீனியர் ஆசாமி.. இந்த தகவல் எவ்வளவு உறுதின்னு கேட்டபோது.. இது மிகவும் நம்பகமான ஒரு அதிகாரியிடம் இருந்து கிடைத்த தகவல் என்றதை.. இந்த அதிகாரி கேட்டுவிட்டு.. இதை ரா வின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப மறுத்துவிட்டு.. யாதவை.. திட்டி.. இந்த மாதிரி கிசு கிசுல்லாம் ஏன் மேன் அனுப்புறன்னு திட்டினார்.

திட்டினாரா..? திட்டினபின்.. இதே அதிகாரி கடத்தப்பட்ட விமானத்தில் பயணித்து மாட்டிக் கொண்டார். இவர் பெயரை வெளிப்படுத்தியிருந்தால்.. தீவிரவாதிகள் அன்றைக்கே போட்டுத் தள்ளி இருப்பார்கள். காலக் கொடுமை என்பது இதுதான்..

இந்த MISSION RAW என்கிற புத்தகத்தில் பலதும் வருகிறது. இந்தக் கடத்தலின் பிணைய கோரிக்கையில் மசூத் அசாரை விடுவித்தது இந்திய அரசு.

சரி ஹன்சாரிக்கு வருவோம்..இந்த ஹன்சாரியை துணை ஜனாதிபதிக்கு முன்மொழிந்தது சீதாராம் எச்சூரி என்கிற கம்யூனிஸ்ட். இந்த தேசம் அழிய கம்யூனிஸ்டுகள், நக்ஸல்கள், மார்க்ஸிய-லெனினிஸ்டுகள் மட்டுமே போதும்…

இந்த தேசத்தின் பாதுகாப்பிற்கு ரா அமைப்பு இரண்டு வகையில் பாடுபடுகிறது. ஒன்று.. Defence: நம் நாட்டில் நடக்கும் அதி தீவிர போராட்டங்கள்.. கல்லெறி, தீவிரவாதம், டுக்டே.. குண்டுவெடிப்பு.. தேசிய அவமதிப்பு போன்றவற்றின் பின்.. ஒரு சில அமைப்புகள் உள்ளன. இவை.. பெரும்பாலும் வெளிநாட்டு அமைப்புகள்

ஏதோ ஒன்றில் இப்படியான தீவிரவாத பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று.. இங்கு அதை அமுல்படுத்த முனைவதை தடுக்க பாடுபடுவதற்கான உளவும்.. அதுசார்ந்த காரண காரியங்களையும் வெளிநாட்டில் நடத்துகின்றன.

இரண்டு. Offence. தீவிரவாதிகளை புலனாய்வு.. தொடர்தல்.. அல்லது இப்படியான ஆசாமிகளை பிடித்து neutralise செய்வது..

தாவூதை.. கராச்சி தெருவில் போட்டுத்தள்ள நம் ரகசிய வீரர்கள் தயாராக இருந்தபோது.. எவராலோ.. அல்லது சிலரின் பசியாலோ.. இது தடுக்கப்பட்டது.

இஸ்ரேலின் மொசாத் விரட்டி விரட்டி தீவிரவாதிகளை கொல்வது இப்படியான அஃபன்ஸ் ஆட்டங்களில்தான்.

இதையெல்லாம் தாண்டி.. நிறைய உளவு விஷயங்கள் இருக்கிறது. இதற்கெல்லாம் உளவாளிகள் நம் தூதரகங்களில் பணியில் இருப்பார்கள். அல்லது வேறு இடங்களில் வேலை செய்து கொண்டு இந்திய தூதரகங்களோடு தொடர்பில் இருப்பார்கள்.

இவர்களோடு வேலை செய்பவர்களுக்கே அல்லது இந்திய தூதரகத்திற்கே கூட..இவர் ரா அமைப்பு ஆசாமியா என்பதே தெரியாத போது.. இப்படியான ஆசாமிகளை.. அடுத்த தேசத்தின் உளவு அமைப்பிற்கு போட்டுக் கொடுப்பது.. நம் இந்திய அம்பாஸிடர் என்றால்.. அன்சாரி மாதிரி ஆசாமிகள் என்ன மாதிரியான ஜன்மங்கள் என்று கேட்க தோன்றுகிறதல்லவா..? இந்த லட்சணத்தில் இரண்டுமுறை துணை ஜனாதிபதி வேறு..

இன்னொரு விஷயம் சொல்கிறேன்.. ரத்தன் சேகல் என்கிற அடிஷனல் டைரக்டர் (IB) இன்டெல்லிஜன்ஸ் பீரோ அதிகாரி. சிஐஏக்கு சென்ஸிடிவ்வான தஸ்தாவேஜ்களை கைமாற்றும்போது.. சிக்கிக் கொண்டார். இது 1996 இல் நடந்தது. மற்ற யாராவது இதை செய்து இருந்தால் சிதைத்து செல்லில் போட்டிருப்பார்கள். ஆனால்.. இவரின் ராஜினாமாவை அனுமதித்தது மில்லாமல்.. இவரை அமெரிக்காவிற்கு செல்ல அனுமதித்தது அரசு.

இந்த சேகல்தான் நம்பி நாராயணனை.. ISRO உளவு கேஸில் மாட்ட வைத்தது. இது தாண்டி இந்த ஆள்தான் அன்சாரிக்கு க்ளோஸ் பிரண்டு வேறு.. இந்த ஆள் வெளியுறவுத் துறையில் ஜாயின்ட் செக்ரட்டரியாக இருந்தபோது.. ராவின் பல ஆபரேஷன்களை இந்த அன்சாரி ஆசீர்வாதங்களுடன் நாசமாக்கியவர்.

– பிரகாஷ் ராமசாமி Prakash Ramasamy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe