spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமுகிலன் கைது: ஒரு பார்வை!

முகிலன் கைது: ஒரு பார்வை!

- Advertisement -

தற்போது சமூக வலைத்தளங்களில் முகிலன் கைது குறித்து இருவேறு பிரிவாகப் பிரிந்து, ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன. முகிலனுக்கு ஆதரவாக நக்சல் ஆதரவாளர்கள், திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்கள், இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவாளர்கள், நாம் தமிழர் குழு, இடது சாரிகள்  என ஒரு தரப்பு இயங்குகின்றது. 

அதே நேரம், முகிலன் விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, வலதுசாரிகள் குழு ஒன்றும் சமூகத் தளங்களில் தங்களது ஐயங்களைக் கேள்விகளாக்கி வருகின்றனர். 

மன்சூர்அலி கான், பியூஷ் மானுஷ் உள்ளிட்டோரின் நக்ஸல் ஆதரவு கருத்துகளை சமூகத்தில் முன்வைப்பதையே தனது பத்திரிகை தர்மமாகக் கடைப்பிடித்து வரும் திமுக.,வின் பினாமி புலனாய்வு இதழின் இணையப் பக்கங்களில் வீடியோ பதிவுகள் வைரலாகி வருகின்றன. 

இதன் பின்னணியில், முகிலன் குறித்த பல்வேறு சந்தேகங்களை சமூகத்தின் முன் வைத்து சமூகத்தளங்களில் வைரலாக உலாவரும் ஒரு தொகுப்புக் கட்டுரையை, உள்ளது உள்ளபடியே இங்கே தருகிறோம். இந்தக் கட்டுரைக்கும் ‘தமிழ் தினசரி’ தளத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!

– ஆர்.


140 நாள்கள் தலைமறைவாக இருந்த முகிலன் நேற்று ஆந்திராவில் கைது செய்யப்படடார்,

சென்னையில் முகிலனை சந்தித்த பின் அவரது மனைவி பூங்கொடி பேட்டி
* முகிலனுக்கு எதிரான பாலியல் வழக்கு சித்தரிக்கப்பட்டது –
* முகிலன் தெளிவான நிலையில் இல்லை;
* சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அவரை சித்திரவதை செய்திருக்கிறார்கள்
* முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை,
* விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்

இவரு செல்போனை சோதித்த ஆந்திரா போலீஸ், காணாமல் போன தினத்தில் இருந்து இன்று வரை முகிலன் தன் மனைவி கிட்ட தினசரி பேசியிருக்கார்..

ஆனால் மனைவி நீதிமன்றத்தில் அவரை காணவில்லை என்று ஆள்கொணர்வு மனு அளித்துள்ளார் .. எப்படி நாடகம் பாருங்கள் ,, இவங்க சமூக பேராளிகளாம்

பாலியல் வன்கொடுமை வழக்குக்கு பயந்து திருப்பதிக்கு ஓடியவன் பேராளியாம்
தமிழ் மக்களை கோமாளிகளாக ஆக்கும் போராளிகள் என்ற போர்வையில் நடமாடும் கழுத்தை புலிகள் இவர்கள்

முகிலன் காணாமல் போனபோது சமூக விரோதிகள்.நோட்டிஸ்களும் ஊடக நெறியாளர்கள் கேள்விகளும்

எதிரி நாட்டிடம் புடிபட்ட அபிநந்தன் வந்தாச்சு ,, உள்நாட்டில் அதுவும் உள்ளூரில் உலவி கொண்டு இருந்த முகிலன் எங்கே ? – மனித நேய மக்கள் கட்சி

என் முகிலனை எங்கே போனார் என்று கண்டு புடிக்க முடியவில்லை செயற்கை கோல் அனுப்பி என்ன பயம் – வேல்முருகன் – இப்படி எத்தனை எத்தனையோ வசனங்கள்

முகிலனைக் கொலை செய்து புதைத்து விட்டார்கள் என்று வதந்தி பரப்பிக் கொண்டிருந்தனர் இந்த சமூக விரோதிகள்.

ஊடக நெறியாளர்கள் கேள்விகள் : எதிரி நாட்டிடம் புடிபட்ட அபிநந்தனை ஒரே நாளில் மீட்க முடிந்த மோடி அரசுக்கு உள்ளூர் முகிலனை மீட்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம் ,, அப்படியானால் நடந்தது யாரால் ?

எப்படி கேள்வி ,, நடந்தது யாரால் என்றால் ? அதாவது எடப்பாடி கொலை செய்தாரா ? இல்லை மோடி கொலை செய்தாரா ? என்ற அர்த்தத்தில் கேள்வி கேக்கப்பட்டது ,,
இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் கேக்கப்பட்டன ,,

இன்னைக்கு அவர், அவர் மனைவியிடமே தினசரி பேசி கொண்டு இருந்து இருந்திருக்கிறார்.

அப்படியானால் நாம் ஒரு கேள்வி கேப்போம் ” அனுப்பியது யாரால் ” இந்த கேள்வியை இந்த கேடு கெட்ட நெறியாளர் திமுகவை பார்த்து கேப்பானா ?

தந்தி டிவியில் பணியாற்றும் ஒரு நெறியாளர் ஒரு விவாதத்தில் முகிலனைக் கொன்றே விட்டார்கள் என்று வெக்கமே இல்லாமல் அலறினார் இன்று முகிலன் உயிருடன் உள்ளார். ஆனாலும் வதந்தியைப் பரப்பி சமூகத்தின் பொது அமைதியைக் குலைத்த இந்த ஊடக வியாபாரிகள், இந்த அற்பர்கள் நேர்மையுடன் தங்கள் தவறை ஒப்புக் கொள்வார்களா? ஒரு போதும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நேர்மையற்றவர்கள் அவர்களுக்கு தேவை தமிழ் நாட்டில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் அப்போது தான் அவர்கள் டிவி வருமானம் பெருகும்

மகள் போல் .உடன் பழகிய பெண்ணை கற்பழித்து ஏமாற்றி விட்டு ஓடி போய்
ஆந்திராவில் தலைமறைவாக பதுங்கியிருந்த இவருக்கு தமிழ் ஆர்வலர்கள் வைத்துள்ள பெயர் சமூக போராளி

கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட ஒருவனுக்கு ஊடகங்கள் கொடுத்துள்ள மரியாதை சமூக செயற்பாட்டாளர் என்றால் சமூகம் குறித்த ஊடகங்களின் பார்வை என்ன?

மொள்ளமாரி, முடுச்சவிக்கி” கேப்மாரி, திருட்டு, பாலியல் வன்முறையில் ஈடுபடுபவன் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கூடவே மோடி ஒழிக என்று மட்டும் கூறுங்கள் தமிழ் ஊடகங்களுக்கு நீங்கள் தான் தியாகி

இன்னும் இரண்டு குற்றங்கள் கூடுதலாக இவர் செய்திருந்தால் செய்திருந்தால், இவருக்கு கொடுக்க போகும் விருதுகள் என்னவாக இருக்கும்? செயலுக்கு ஏற்றார் போல் ” விகடன் விருது ” கொடுப்பார்கள் இந்த எச்சை ஊடகங்கள்

ஒரு நாளாவது, ஒரு ஊடகமாவது கற்பழிக்க பட்ட பெண்ணுக்கு ஆதரவா பேசியிருப்பானா ? உத்தரப் பிரதேசத்தில அதுவும் ஒரு இந்து கற்பழித்து விட்டால் ஆடு, ஆடு என்று ஆடுவாங்க ?.. இன்னைக்கு ஊடக நெறியாளர் மன்னிப்பு கேப்பானா ? மாட்டான்

இனிமே தமிழ் ஊடகங்களை கேக்கவே வேண்டாம் ,, ஒரு வாரத்துக்கு இந்த ஆளை வச்சுதான் காலத்தை ஓட்டுவார்கள்,,, இவனை தமிழ் நாட்டை காக்க வந்த பெரிய மகான் போல சித்தரிப்பான் ஊடக நெறியாளர்

இப்பவே முகிலனுக்கு ஆதரவா தொடங்கி விட்டார்கள்… முகிலனை பார்க்க ஒடோடி வந்த மனைவி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருப்பது போல ஊடகம் ஒப்பாரி வைக்கிறது என்ன ஒரு நாடகம் ,, போலீஸ் விசாரித்து விட கூடாது, கைது செய்து விட கூடாது என்று முகிலனை பார்க்க வந்த மனைவி ஆக்சிடென்ட் போல உருவாக்குகிறார்கள்

முகிலனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குரிய நியாயத்தைப் பெற்றுத் தருவதே சமூகத்தின் கடமை! முகிலன் தான் புரிந்த பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்றே ஆக வேண்டும் !

இந்த பெண்ணுக்கு ஊடகம் துணை நின்று எதிரிக்கு தண்டனை வாங்கி கொடுக்க பாடுபடுமா இல்லை பாடுபடாது ? அவனுக்கு பணம் ஒன்றே குறி ,, தமிழக ஊடகம் காரி துப்பும் அளவுக்கு மோசமாக உள்ளது என்பது மட்டும் உண்மை

ஊடகம் கேக்க வேண்டிய கேள்விகள் விவாதத்தில்

  • தன்னுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுடன் பாலியல் வன்முறையில் ஈடுபடலாமா ?
  • முகிலன் காணாமல் போனை பிறகு அவர் மனைவியுடன் எப்படி பேசினார் ?
  • அப்படியானால் அவர் எப்படி காணாமல் போனதாக அறிவிக்க பட்டது ?
  • தன் கணவனுடன் தினசரி பேசி கொண்டு இருக்கும் மனைவி தன் கணவனை காணவில்லை என்று ஏன் ஆள்கொணர்வு மனு கொடுத்தார் ?
  • முகிலன் மனைவிக்கு 25 லச்ச ரூபாய் கார் எப்படி வந்தது
  • காரின் செல்லும் போது அக்சி டென்ட் ஆகும் மனைவி அதற்குள் சென்னை வந்தது எப்படி ?
  • உதயநிதி பிரச்னை வரும் போது வெளியே வந்தார் எப்படி ?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன ,, இதில் ஒரு கேள்வியை இந்த ஊடக நெறியாளர் கேப்பானா ? கேக்க மாட்டான் ,, அதுதான் தமிழக ஊடகம்

இந்த துரோகியை  இந்த ஆளை தேசிய புலனாய்வு கொண்டு தீவிரமான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் ஏனென்றால் …..

ஆந்திர மாநிலம் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலம் . இவர் தமிழ் நாட்டில் இருந்து ஆந்திராவில் 150 நாள்கள் தங்கி இருந்து உள்ளதால் இவருக்கு வேண்டிய பணிவிடைகளை அங்குள்ள நக்சலைட்கள் செய்து கொடுத்து இருப்பார்கள்

அதனால் இவரை நக்சலட் குறித்து தேசிய புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும்

நீங்கள் ஏன் காணாமல் போனீர்கள் ? ,, உங்களை கடத்தியவர் யார் ?
யார் சொல்லி நீங்கள் ஒளிந்து இருந்திர்கள் ? இப்போம் திடீர் என்று வெளி எப்படி வந்திர்கள் ? உங்களுடன் தங்கி இருந்தவர்கள் யார் யார் ?
5 மாதமாக எங்கே எல்லாம் இருந்திர்கள் யார் யாரை சந்தித்திர்கள் ?
உங்கள் மீது கற்பழிப்பு புகார் கூறியதற்கு என்ன சொல்லுகிறீர்கள் ?

ஆனால் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்! இது அனைத்தும் திமுக வின் பித்தலாட்ட வேலை ,

இவர் தலைமறைவானது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு. அப்போது தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது

இவர் மீது பாலியல் புகார் அளிக்கிறது ஒரு பெண்மணி,, வழக்கு பதிந்து விடுவார்கள் போல் தோன்றுகிறது , தலைமறைவாக வாழ வேண்டிய சூழ்நிலை வருகிறது,, உடனே இவருக்கு அடைக்கலம் கொடுக்க திமுக முன் வருகிறது ,, இவரை ஒளிந்து கொள்ள சொல்கிறார்கள்,,

முகிலனை காணவில்லை,, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக முகிலனை யாரோ கடத்தி விட்டார்கள் எடப்பாடியும் மோடியும் எதோ செய்து விட்டார்கள் என்று ஊடகம் மூலம் பரப்புகிறார்கள்,,

நன்றாக கவனித்து பாருங்கள் பாராளுமன்ற தேர்தலின் போது யாருமே முகிலன் காணவில்லை என்ற கோசத்தை யாரும் பெரிதாக எழுப்பவில்லை, தேர்தலில் முடிந்த பிறகு கூட முகிலனை காணவில்லை என்று யாரும் சத்தம் போட வில்லை ,,

அப்படியானால் ஏதாவது பிரச்சனையை மறைக்க முகிலன் என்ற போராளியை ஒளித்து வைத்தது போல் தெரிகிறது,, இல்லை என்றால் வைகோ மற்றும் தமிழ் போராளிகள் எல்லாம் கத்துவார்கள் ,, ஆனால் அவர்கள் சத்தத்தையே காணவில்லை ,, இப்போது சரியாக உதய நிதி பிரச்சனையை மறைக்க உத்தமன் முகிலனை வெளியே கொண்டு வருகிறார்கள் இது தான் உண்மை

நாடகம் முடிவடையும் தேவை வந்ததால் தானாக வந்து சிக்கி கொண்ட முகிலன்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்,,

ஓன்று ; தமிழ் நாட்டில் இந்த முகிலனை போல் நக்சலைட் ஆதரவாளர்கள் கொஞ்ச பேர் உண்டு, இவர்களில் ஒட்டு கமலஹாசன், சீமான் போன்றவர்களுக்கு விழாமல் திமுகவிற்கு விழுவதற்கு செய்த ஏற்பாடு

இரண்டு ; தேவை படும்போது பயன்படுத்தி கொள்வது ,, இரண்டாவது உதயநிதிக்கு ஆதரவாக பயன்படுத்தி கொண்டார்கள் ,,

தலைமையே திமுக தான்

நீர் வளத்தை பாதுகாக்கறதுக்காக போராளியா மாறினேன்! இயற்கை வளத்தை காப்பதற்காக போராளியாய் மாறினேன்! ஆலையக் கழிவுகளால் மக்களுக்கு ஏற்படும் இன்னலை தடுப்பதற்காக போராளியாய் மாறினேன்! மது ஒழிப்பதற்காக போராளியாய் மாறினேன்! தமிழ் ஈழத்துக்காக போராளியாய் மாறினேன்! என்று கூறும் அத்தனைப் பெருச்சாளிகளும், இக்குற்றங்கள் அனைத்தையும் ஒத்தையாக நின்று செய்து கொண்டிருக்கும் திமுகவை மட்டும் ஒருபோதும் விமர்சித்ததே கிடையாது, ஏன்னா அத்தனைப் பெருச்சாளிகளுக்கும் தலைமையே திமுக தான்!

தனக்கென்று ஒரு பிரச்னை வரும் போது, தன் மீது கடும் விமர்சனங்கள் எழும் போது திமுக என்னும் மாஃபியா இந்த போலிப் பெருச்சாளிகளை கிளப்பி விடும்.

மக்களின் கவனம் அந்தப் பெருச்சாளிகளின் பக்கம் திரும்பும் போது திமுக என்னும் மாஃபியா இவர்களை வைத்து தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் அது போன்ற ஒரு சம்பவம் தான் முகிலன் கைதும். இத்தனை நாட்கள் பாதுகாப்பாக திமுக கஸ்டடியில் இருந்து விட்டு, உதயநிதி பதவி ஏற்றதில் மிகப் பெரிய சர்ச்சை வெடித்ததும் முகிலன் என்னும் கழுதை புலியை அவிழ்த்து விட்டுள்ளனர்!

இத்தனை நாளும் இல்லாதத் திருநாளா திருப்பதி இரயில் நிலையம் சென்று பொதுமக்கள் பார்வைக்கும் காவல்துறையினர் பார்வைக்கும் படும்படியாக சவரம் செய்யாத அழுக்கு உடையுடன் பரிதாபகரமானத் தோற்றத்துடன் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் குறித்து அந்த சொரிநாய் குலைத்தற்கானக் காரணம் என்ன? சிந்தியுங்கள் மக்களே! சிந்தியுங்கள்!

மக்களும் தற்போது உதயநிதி பற்றிய நிகழ்வை மறந்துவிட்டு தங்களது கவனத்தை முகிலன் பக்கம் திருப்பி விட்டார்கள்

இதுதான் திமுகவின் களவாணித்தனத்திற்கு கிடைத்த வெற்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe