ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறார் விஜய்! ரசிகர்கள் உற்சாகம்!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

vijay actor sing song - 2026

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும்  பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல்  கசிந்துள்ளது. அந்தத் தகவல் விஜய் ரசிகர்களை  மேலும் உற்சாகத்தில் தள்ளியுள்ளது. .ஆம்… நடிகர்  விஜய், முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் பாடவுள்ளார் என்பதுதான் அது!

முன்னர், சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில்  பேசிய நடிகர் விஜய், தன்னை ஏ.ஆர்.ரஹ்மான்  பாடச் சொன்னதாகவும், இவ்வளவு பெரிய  இசையமைப்பாளரின் இசையில் பாடும் அளவுக்கு  தான் நல்ல பாடகன் இல்லை என்றும் கூறி அந்த  வாய்ப்பை மறுத்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.  விஜய் தனது படங்களில் ஏதேனும் ஒரு பாடலைப்  பாடி ஹிட் அடிக்க வைத்துவிடுவார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான மெர்சல், சர்கார் இரு படங்களிலுமே விஜய் பாடவில்லை.

இந்நிலையில் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் பிகில் படத்தில் விவேக் பாடல் எழுத, ரஹ்மான் இசையில் விஜய் பாடுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். பாடலின் பெயர் வெறித்தனம் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.