
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படும் என்றால் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பலரை தற்போது எங்கு உள்ளார்கள் என காவல்துறை விசாரிப்பது ஏன்? அவர்களை வீட்டுச் சிறையில் வைப்பதற்கா? கடந்த ஆண்டு திமுக., ஆட்சியிலும் இதே போல் தானே நடந்தது. – என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, முருகப் பெருமானின் அறு படைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில், மலை மீதுள்ள தீபத்தூணில் நவ.24 நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவ.24ம் தேதி அன்று ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றும்படி, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று உடனே அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி அளிக்கப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் இருவரும் இன்று பணியில் இல்லை. மேலும், நாளை நவ.24ம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் இந்த மனுவை விசாரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இந்நிலையில், அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். உடன், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், அரசு உயர் அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தடுப்புகள் போடப்பட்டு, 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவுகிறது.
Posts by Dhinasari Reporter:
- VHP Condemns Tamil Nadu Govt’s Review Petition on Karthigai Deepam
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!


