aus ind t20 - 2026

IND Vs AUS: இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

விளையாட்டு
aus ind t20 - 2026

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டி, நாக்பூர், 23.09.2022
– முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி (எட்டு ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 91 ரன், ஃபின்ச் 31 ரன், வேட் 43 ரன், அக்சர் படேல் 2/13) இந்திய அணியிடம் (7.2 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 92 ரன், ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 46, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன்) ஆறு விக்கட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

நாக்பூரில் நேற்று நல்ல மழை பெய்திருந்தது. இரு அணிகளும் அதனால் நெட் ப்ராக்டிஸ் கூட செய்ய முடியவில்லை. இன்று அதனால் போட்டி சரியான சமயத்தில் தொடங்கவில்லை. பிட்சுக்கு வெளியே மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. ஒருவழியாக போட்டி எட்டு ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டு, இரவு 2115 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை விளாசினார்கள். இன்று புவனேஷ்குமார், உமேஷ் யாதவ் இருவரும் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக பும்ரா, பந்த் ஆடினார்கள். முதல் ஓவரை ஹார்திக் பாண்ட்யா வீசினார். அதில் 10 ரன் கொடுக்கப்பட்டது. இரண்டாவது ஓவரை அக்சர் படேல் வீசினார்.

அவரது சுழலில் ஒரு விக்கட் விழுந்தது. ஒருவர் ரன் அவுட் ஆனார். 9 ரன் கொடுக்கப்பட்டது. மூன்றாவது ஓவரை சாஹல் வீசினார்; 12 ரன் கொடுத்தார். கடைசி எட்டாவது ஹர்ஷல் படேல் ஓவரில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் எடுத்து மொத்தம் 91 ரன் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவைத் தவிர மீதி ஆடியவர்கள் அனைவரும் ரன் ரேட் ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட்டைவிட அதிகமாக இருக்குமாறு விளையாடினர்.

ராகுல் (6 பந்துகளில் 10 ரன்), கோலி (6 பந்துகளில் 11 ரன்) பாண்ட்யா (9 பந்துகளில் 9 ரன்) தினேஷ் கார்த்திக் (2 பந்துகளில் 10 ரன்) ஆகியோர் நன்றாக ஆடினர்.

ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன் அடித்து வெற்றிக்கு அடிகோலினார். இந்த வெற்றியோடு இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இரண்டும் 1-1 என்ற கணக்கில் தொடரைச் சமன் செய்துள்ளன. அடுத்த போட்டி ஞாயிறு அன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.