FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

fifa2026 - 2026

உலகக் கோப்பை கால்பந்துப்போட்டி 2026 : ரவுண்ட் 16 கடைசி நான்கு ஆட்டங்கள்

 போர்ச்சுகல் அதிர்ச்சித் தோல்வி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          காலிறுதிக்கு முந்தைய சுற்று ஜூலை 4ஆம் தேதி தொடங்கியது. கடைசி நாலு ஆட்டங்கள் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடந்தது. இதில் போர்ச்சுகல் அணி ஸ்பெயின் அணியிடல் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இது போட்டியின் ஒரு அப்செட் தோல்வியாகும். அதுபோல போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்க அணி பெல்ஜியம் அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. போட்டியை நடத்தும் மூன்று நாடுகளும் போட்டியில் இருந்து தோல்வியடைந்து விலகிவிட்டன.

          காலியிறுதிக்கு முந்தைய கட்டத்தின் ஐந்தாவது ஆட்டம் ஆர்லிங்க்டனில் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. போர்ச்சுகல், ஸ்பெயின் அனிகள் மோதின. இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டநேர இறுதி வரை சென்றன. ஆனால் 91ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மிக்கல் மெரினோ கோல் அடித்தார். “லா ராஜா” என ஸ்பானிஷ் மொழியில் அழைக்கப்படும் ஸ்பேயின் அணி இந்த ஒற்றை கோலால் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டொ இந்தத் தோல்வியால் மனமுடைந்து போனார்.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

          ஆறாவது ஆட்டம் அமெரிக்கா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையே சியாட்டிலில் ஜூலௌ 6ஆம் தேதியன்றெ நடைபெற்றது. இதில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏழாவது ஆட்டம் அர்ஜெண்டைனா, எகிப்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடந்தது. ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்திலும் 67ஆவது நிமிடத்திலும் கோலடித்து எகிப்து அணி கோலடித்து முன்னணியில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் அர்ஜெண்டைனா அணியின் ரொமெரோ (79ஆவது நிமிடம்), மெஸ்ஸி (83ஆவது நிமிடம்), ஃபெர்னான்டஸ் (92ஆவது நிமிடம்) கோல் அடித்து அர்ஜெண்டைனா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறவைத்தனர். இந்த ஆட்டத்தில் நடுவர்கள் எகிப்து அணிக்கு எதிராகவும் அர்ஜெண்டைனா அணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

          காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும் கோல் போடவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

காலிறுதி ஆட்டங்கள்

ஜூலை 9இல், ஃபாக்ஸ்பர்ரோவில் ஃபிரான்சு, மொராக்கோ அணிகளுக்கு இடையேயும் 

ஜூலை 10ஆம் நாள் இங்க்லேவுட்டில் ஸ்பெயின், பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயு

ஜூலை 11இல், மியாமியில் இங்கிலாந்து, நார்வே அணிகளுகிடையேயும்

ஜூலை 11இல் கன்சாஸில் அர்ஜெண்டைனா, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயும் நடைபெறுகின்றன.

பிரான்சு, ஸ்பெயின், இங்கிலாந்து, அர்ஜேண்டைனா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது என்னுடைய கணிப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories