பழனி கோயிலில் தீப விழா! நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம்!

Published:

palani-karthigai-deepam
palani-karthigai-deepam

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் ஏற்றப்பட்ட சொக்கப்பனையை பக்தர்கள் தரிசித்தனர்.

palani-karthigai-hindumunnani-protest
palani-karthigai-hindumunnani-protest

பழனி கோவிலில் கார்த்திகை தீபத்திற்கு பக்தர்களை அனுமதிக்காத பழனி கோவில் நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி மலைக்கோவிலுக்கு சென்ற இந்து முன்னனியனரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பை கண்டித்து இந்து முன்னனி சார்பில் தடையை மீறி மலைகக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

palani-karthigai-hindumunnani-protest1
palani-karthigai-hindumunnani-protest1

இதனையடுத்து இன்று பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல 50க்கும் மேற்பட்ட இந்துமுன்னனியினர் குவிந்தனர். மாநில இணைஅமைப்பாளர் பொன்னையன் தலைமையில் கோவிலுக்கு செல்ல முயன்ற இந்து முன்னனியினரை போலீசார் தடுத்து கைது செய்தனர். தடையை மீறி கோவிலுக்கு செல்ல முயன்ற இந்து முன்னனியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img