spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமத்திய இடைக்கால பட்ஜெட் - 2024 தாக்கல்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகள்...

மத்திய இடைக்கால பட்ஜெட் – 2024 தாக்கல்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகள் என்ன?!

- Advertisement -
nirmala seetharaman budget

மத்திய பட்ஜெட் – 2024:

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் உள்ள சிறப்பம்சங்கள்

  • பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;
  • கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது;
  • 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது;
  • 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது;
  • திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது-
  • மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது;
  • 2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்;
  • 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன;
  • அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
  • ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;
  • முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;
  • கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது
  • நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;
  • வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;
  • நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;
  • ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;
  • கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்-நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்;
  • ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்;
  • மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும்;
  • 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்;
  • 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்.
  • சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் ஆகியவையே பிரதமர் மோடி அரசின் தாரக மந்திரம்;
  • ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்;
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்;
  • 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும்;
  • 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்;
  • மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.
  • வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்;
  • சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்;
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு;
  • கடல் உணவு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது;
  • மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • மோடி பிரதமரான பின்னர் 600 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது;
  • இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் 30.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு. அதில் நிதிப் பற்றாக்குறை 5.8%;
  • நாட்டின் மொத்த கடன் 14லட்சம் கோடியாக உள்ளது;
  • நேரடி வரி வருவாய் வசூல் கடந்த 5 ஆண்டுகளில் 3மடங்காக அதிகரித்துள்ளது;
  • பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ள
  • வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.
  • நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது; தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  • எரிசக்தி, கனிமங்கள் மற்றும் சிமெண்ட் பொருட்களின் போக்குவரத்துக்காக பிரத்யேக ரயில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு முடிவு
  • துறைமுகங்களை இணைக்கவும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் மார்க்கத்தில் மேலும் 2 வழித்தடங்கள் அமைக்கவும் திட்டம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 28 சதவீதமும், வருமான வரி மூலமாக 19 சதவீதமும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 18 சதவீதமும், வர்த்தக வரி மூலமாக 17 சதவீதமும், வரி அல்லாத ரசீதுகள் மூலமாக 7 சதவீதமும், தொழிற்சங்க கலால் வரிகள் மூலமாக 5 சதவீதமும், சுங்க வரிகள் மூலமாக 4 சதவீதமும், கடன் அல்லாத மூலதன ரசீதுகள் மூலமாக ஒரு சதவீதமும் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது.

அதேபோல், வட்டி கட்டுவதற்கு மற்றும் மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக தலா 20 சதவீதமும், மத்திய அரசின் திட்டங்களுக்காக 16 சதவீதமும், இதர செலவினங்களுக்காக 9 சதவீதமும், நிதி ஆயோக் மற்றும் பிற இடமாற்றங்கள், பாதுகாப்புத்துறை, மத்திய நிதியுதவி திட்டங்களுக்காக தலா 8 சதவீதமும், மானியங்களுக்காக 6 சதவீதமும், ஓய்வூதியத்திற்காக 4 சதவீதமும் செலவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:

* இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது.

* பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளும் துடிப்புடன் பங்காற்றி வருகின்றன.

* அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையும்.

* கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்ததாவது:

மத்திய பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

வருமான வரி உச்ச வரம்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட வழிமுறைகளே தற்போது தொடரும்.

பொருளாதார ரீதியாக மத்திய தரம் என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்ப்பு தனி நபர் வருமானவரியில் சலுகைகள்தான்.

ஆனால், கடந்த முறை கொண்டு வரப்பட்ட “ஓல்டு ரெஜிம், நியூ ரெஜிம்” எனும் இரண்டு திட்டங்கள் தொடர்ந்து நடைபெறப்படும் என்பது தற்போது தெளிவாகி உள்ளது.

‛‛ மத்திய பட்ஜெட்டில் 2024 – 25ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது” என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத்துறையில் அனைத்தையும் பிரதமர் மோடி மாற்றி அமைத்து உள்ளார். தற்போது, ரயில்வேயை நவீனமயமாக்குவதில் முதலீடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கேரளாவுக்கு ரூ,2,744 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.2,681 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2,861 கோடி ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

2024 ஜூன் 16 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் 543 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் வெளியிடப்படும்.

நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது உரையில், 10 ஆண்டு கால பா.ஜ.க. அரசின் பொருளாதார சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

தற்போது அரசின் செலவு – ரூ.44.90 லட்சம் கோடி, வரி வருவாய் மதிப்பீடு – ரூ.27.56 லட்சம் கோடி, நிதி பற்றாக்குறை – 5.8 சதவீதம் என உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

* வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும்.

* வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வழிவகை செய்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

* நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

* பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது

* ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

* அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

* தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நிதியம் அமைக்கப்படும்

* பால் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம் கொண்டு வரப்பட உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe