spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்பாஜக., வெற்றி பெற்றால்... திருவண்ணாமலை, காசியைப் போல் பிரமாண்ட வளர்ச்சி பெறும்!

பாஜக., வெற்றி பெற்றால்… திருவண்ணாமலை, காசியைப் போல் பிரமாண்ட வளர்ச்சி பெறும்!

- Advertisement -
annamalai in thiruvannamalai

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும் என்றாா் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை..

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாஜக சார்பில் எண் மண் என் மக்கள் என்ற பிரச்சார நடை பயண நிகழ்ச்சி இரண்டு நாளாக நடைபெற்று வருகிறது.  யாத்திரையின் 2-ஆவது நாளான புதன்கிழமை காலை திருவண்ணாமலை நகர வணிகா்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றாா். இதில், பாஜக மாநில துணைத் தலைவா் நரேந்திரன், வேலூா் பெருங்கோட்டப் பொறுப்பாளா் காா்த்தியாயினி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பாலசுப்பிரமணியன், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாநில நிா்வாகி சங்கா், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை காமராஜர் சிலை எதிரில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்ற நடைப்பயண நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். அவரது பேச்சைக் கேட்க ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது அவர் பேசியவை…

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வளா்ச்சியில் 11-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2 மடங்கு அதிகரித்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.

உலக வரலாற்றில் தீா்க்க முடியாத பிரச்னைகளை எல்லாம் மத்திய அரசு தீா்த்து வைத்துள்ளது. 1528-ஆம் ஆண்டு முதல் தீா்க்கப்படாமல் இருந்த பிரச்னைக்கு தீா்வு கண்டு பால ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் திருவண்ணாமலை நகரம் வாரணாசியைப் போல வளா்ச்சி பெறும். நகரமே மாடல் சிட்டியாக மாற்றப்படும்.

விவசாய நிலத்தை நாங்கள் தரமாடோம் என கூறிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை செலுத்தி கைது செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளது. மேலும் பல முன்னேற்றங்கள் அடைய வேண்டும் என்றால் மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் . மலைவாழ் மக்களுக்கு இலவச வீடுகள், விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு திட்டங்களுக்கு பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை இந்தியா முழுவதும் பாரத பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு திட்டங்கள் தான் அவற்றை ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு தனது திட்டங்களாக செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைகளை, 10 ஆண்டுகளில் மோடி தீர்த்து வைத்துள்ளார். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, இந்தியாவின் ஓர் அங்கமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி ஒரு பக்கம், கலாசார மீட்டெடுக்கும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்காலத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும், 2047ம் ஆண்டில், பொருளாதாரத்தில் முதன்மையாக மாற உள்ளது. திமுக.,, அடாவடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. திமுக.,, தலைமை செயற்குழு உறுப்பினர், ஸ்ரீதரன், அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கை நீட்டி அடித்தார். நீதிமன்றம், மூன்று முறை ஜாமின் வழங்காமல் தள்ளுபடி செய்த நிலையில், அவரை ‍இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. பல் பிடுங்கின பாம்பை போல இங்குள்ள எஸ்.பி., உள்ளார். அவருக்கு ஐ.பி.எஸ்., போட தகுதியிருக்கிறதா.?

யோகி முதல்வராக இருக்கும் உத்தரபிரதேசத்தில், போலீசார் மீது கை வைத்தால், அவன் கை இருந்திருக்காது. அதனால் தான் உ.பி., வளர்கிறது. நேர்மைக்கான மரியாதையை, திமுக.,, கொடுக்கவில்லை. 

திருவண்ணாமலையில், பா.ஜ., வென்றால், அருணாசலேஸ்வரர் கோவில் வளர்ச்சிக்கு, 1,000 கோடி ரூபாய் கொண்டு வருகிறோம். வாரணாசி போல மாற்றி தர முடியும். மோடிக்கு வாக்களியுங்கள். ஹிந்து மதத்திற்கு எதிரான ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது. திருமாவளவனின் சனாதன பிரச்னை என்னவென்றால், பிராமணர்கள் மட்டும் தான், கோவில் கருவறைக்குள் போக முடியும். அதனால் தான் எதிர்க்கிறேன் என்றார்.

இன்று பிராமணர் அல்லாத மோடி, அயோத்தி கருவறைக்குள் சென்று பிராண பிரதிஷ்டை செய்த பிறகு, அதே திருமாவளவன், அது எப்படி மோடி போகலாம், அவர் சங்கராச்சாரியரா, அவருக்கு யார் அனுமதி கொடுத்தது, வெளியில் தானே உட்காரணும் என்கிறார். இதுதான், அவங்க பித்தலாட்ட தனம், பிராமணர்களை திட்டி, திட்டி, அவங்க வேலையை செய்ய விடாமல், அவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை வில்லனை போல சித்தரித்து, தமிழக களத்தை மாற்றி விட்டனர்.

ஸ்டாலின் கூறுவார், ‘பா.ஜ., மதவாத கட்சி’ என்று. ஆனால், உதயநிதி மேடையேறி, ‘நான் ஒரு கிறிஸ்துவன், அந்த வழிமுறையை பின்பற்றுகிறேன். என் மனைவி கிறிஸ்துவர்’ என கூறுகிறார். 

அது மதவாதம் இல்லையாம். இது என்ன பித்தலாட்டம். 19 நாடுகள், அமைப்புகள், மோடிக்கு உயரிய விருது கொடுத்தன. அதில், எட்டு இஸ்லாமிய நாடுகள் அடங்கும்.

திருவண்ணாமலை யாத்திரை குறித்து, அண்ணாமலை தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், தமிழகத்தில், மிகவும் பழமையான ரயில்வே சந்திப்பை உடைய, போக்குவரத்தில் மிக முக்கியமான பகுதியான ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் மகிழ்ச்சி, ஆரவாரத்துடன் வழங்கிய வரவேற்போடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேடியப்ப சுவாமி, வீர ஆஞ்சநேயர், எல்லோரையும் காக்கும் காட்டேரி அம்மன் என ஆலயங்கள் நிறைந்திருக்கும் ஆன்மீக மண். ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமம் அருகே, 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கிடைத்த, தமிழகத்தின் பழமையான தொகுதிகளில் ஒன்று. ஜோலார்பேட்டை மக்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை பெருநகர மக்கள் தண்ணீர் இன்றி தாகத்தில் தவித்த போது, 400 மில்லியன் லிட்டர் தண்ணீர், ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்த பெரிய மனதிற்குச் சொந்தக்காரர்கள்.

ஒரு காலத்தில் சோலைகள் நிறைந்து இருந்ததால், சோலையார்பேட்டை என அழைக்கபட்டு பின்னர் அதுவே ஜோலார்பேட்டை ஆனது. இன்று சோலைகளும் இல்லை, மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் இல்லை. தமிழக அரசின் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் கொள்கைக் குறிப்பு வெளியிடுவது வழக்கம். கடந்த 2022-23ஆம் ஆண்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,581 ஏக்கரில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்க திட்டம் உள்ளதாக தெரிவித்தார்கள். இந்த 2023-24ஆம் ஆண்டு கொள்கைக் குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தின் பெயரையே காணவில்லை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இவற்றை உறுதி செய்வது மட்டும் தான் ஒரு அரசின் தலையாய கடமை. தமிழக அரசின் கொள்கைக் குறிப்பு, திருப்பத்தூர் மாவட்டத்தையே ஒதுக்கி வைத்து, இந்த மாவட்ட மக்களுக்கு அநீதி செய்திருக்கிறது.

நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, அமிர்த பாரத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 கோடி நிதியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்துகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், 26,885 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு, 1,51,750 வீடுகளில் குழாய் மூலம் குடிநீர், 1,38,999 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 65,630 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 98,121 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 53,652 விவசாயிகளுக்கு PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 478 கோடி ரூபாய் என இப்பகுதியின் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது.

ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம். இவைதான் திமுக அரசின் நான்கு கால்கள். இவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, வளர்த்துக் கொண்டிருப்பது திமுகதான். தேசியத் தலைவர்கள் அனைவரையும் ஜாதித் தலைவர்களாக மாற்றியது திமுகதான். தமிழகம் முழுவதும் ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக அமைச்சர்களின் 11 பேர் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் ஜெயிலிலும், ஒரு அமைச்சர் பெயிலிலும் இருக்கிறார்கள். இன்னும் ஐந்து அமைச்சர்கள் மீது, பாஜக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஜாதியை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து, இன்று தேர்தலுக்கு முன்பாக ஜாதிக்கலவரத்தை உருவாக்கி வாக்கு வாங்குவது திமுகவின் வழக்கம்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக வாரிசு அரசியல்தான் செய்கிறது. தொண்டர்களுக்கோ, இளைஞர்களுக்கோ திமுகவில் வாய்ப்பு இல்லை. திமுகவில் பதவியில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் முன்னேற முடியும். தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களில், திமுகவினர் வாங்கிய பொருளுக்குப் பணம் தர மறுப்பதும், கடை உரிமையாளர்களைத் தாக்குவதும் தொடர்கதை. இவற்றை வைத்துத்தான் திமுகவின் இத்தனை ஆண்டுகால அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த 2024 ஆம் ஆண்டு நம்முடைய ஆண்டு. நாம் புதிய காலச்சக்கரத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம். லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான மனிதர் நமது பிரதமர் மோடி அவர்கள். அவரது தலைமையில், பொருளாதாரத்தில் உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல், குடும்ப ஆட்சி நடத்தும் திமுக கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழக மக்களின் பல தலைமுறை எதிர்பார்ப்பான நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe