“அரசா வெங்காயம் விற்கிறது? விலை ஏற்றம் குறித்து விற்பனையாளர்களை, வியாபாரி களை கேளுங்கள்” : காங்கிரஸ் 2013ம் ஆண்டு.
யார் வெங்காயத்திற்கு 100 ரூபாய் கொடுக்க முடியும்? நிதியமைச்சரை கேளுங்கள். அவரால் கொடுக்க முடியும்” : காங்கிரஸ் இன்று 2019ல்.
ஆனால், வெங்காய விலை குறித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசும் போது விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்பது போன்ற பல விவரங்களை பட்டியலிட்டு பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ” நீங்கள் வெங்காயம் சாப்பிடுவீர்களா? என்று நக்கலாக கேட்ட கேள்விக்கு “நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை” என்று பதில்.
“அதிகம் வெங்காயம் உட்கொண்டால் எரிச்சல் வரும்” என்ற காங்கிரஸ் எம் பி யின் பதில். இவர்களின் வக்கிரத்தை, ஏளனமாக எள்ளி நகையாடி கேவலப்படுத்திய நடுநிலை என்று சொல்லிக்கொள்கிற ஊடகவியலாளர்களே, எதிர்கட்சியினரே, ஒரு பெண் என்பதால் தானே நிதியமைச்சரை இந்த அளவிற்கு கிண்டல் செய்கிறீர்கள்? சாதி ரீதியாக அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? இந்த நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு சொல்லி கொண்டிருந்தவரை இடைமறித்து கிண்டல் செய்தவரை கண்டிக்காமல், மக்கள் பிரச்சினைக்கு தீர்வு சொன்னவரை ஏளனப்படுத்தி பேசுவது உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்தி கொள்வதற்கு சமம். இந்த இணைப்பை பாருங்கள். கபில் சிபல் எவ்வளவு கேவலமாக பேசியிருக்கிறார் என்று.
உண்மையிலேயே ‘உப்பு போட்டு சாப்பிடுபவர்கள்’ இந்த இணைப்பை பார்த்த பிறகவாது, நிர்மலா சீதாராமனை ஏளனம் செய்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஒரு பெண் என்பதாலேயே இவரை இந்த அளவிற்கு கிண்டல் செய்து, அவமானப்படுத்துவது உங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களின் உள்ளங்களில் அழுத்தமாக பதியும் என்பதை உணருங்கள்.
- நாராயணன் திருப்பதி.