என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய போலீஸ்! அந்த நாலு பேரை….

Published:

hyderabad four accused - 2026

திசா குற்றவாளிகள் நால்வரையும் என்கவுண்டரில் கொன்றனர் போலீசார்.

இன்று காலை 3 மணிக்கு சீன் ரீ கன்ஸ்டிரக்சன், அதாவது சம்பவம் குறித்து நடித்துக் காட்டுவதற்காக அழைத்து வந்தபோது அந்த இடம் பற்றி நன்கு தெரிந்த குற்றவாளிகள் போலீஸாரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து, மிரட்டியதாகவும், அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும் கூறப் படுகிறது. இந்நிலையில், நால்வரையும் போலீசார் என்கவுன்டர் செய்து கொன்றதாகவும் தெரிகிறது.

அந்த இடத்திற்கு இன்று காலை சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் பார்வையிட்டு வருகிறார். இனிமேல்தான் போலீசில் இருந்து அதிகாரபூர்வமாக செய்தி வெளிப்பட வேண்டும்.

திசாவை எங்கே கொன்றார்களோ எந்த நேரத்தில் கொன்றார்களோ அதே இடம் அதே நேரத்தில் குற்ளவாளிகளும் கொல்லப்பட்டது வியப்பளிக்கிறது. தற்காப்புக்காக போலீசார் எடுத்த முடிவாகக் கூறப்படுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img