அவள் மரித்த பத்தாம் நாள் காரியம்… என்கவுண்டர்; மக்கள் மகிழ்ச்சி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20191206 WA0005 - 2026
என்கவுண்டர் நடைபெற்ற இடத்தை பார்வையிடுகிறார் சஜ்ஜனார்

ஹைதராபாத் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதயபாரம் கொஞ்சம் குறைந்தது. இனி இது போல் குற்றம் செய்ய மனித மிருகங்கள் அஞ்சுவர் என்றார் திசா தாய். இறந்தவளுக்கு சரியாக பத்தாம் நாள் காரியம் இது என்றார்கள் உடன் இருந்தவர்கள்.

இதைத்தான் தாங்கள் விரும்பியதாகவும் இவ்வாறு உடனுக்குடன் தண்டனை கிடைத்தால் தான் இதுபோன்ற குற்றங்கள் இனி தடுக்கப்படும் என்றும் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் … பாதிக்கப்பட்ட அந்த அபலைப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தனது பெண்ணின் துயர மரணத்துக்கு காரணமான நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பதன் மூலம் அவளின் படுகொலைக்கு நியாயம் கிடைத்திருக்கிறது என்றும் இதற்காக தெலங்கானா போலீசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த பெண் மருத்துவரின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக காமுகர்களின் கையில் பலியான டாக்டர் பிரியங்கா வசிக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிகள் கடந்த வாரம் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரை சந்தித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கடினமாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!
hyd cops - 2026

காமுகர்களின் கையில் பலியான டாக்டர் பிரியங்கா வசிக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிகள் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரை சந்தித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கடினமாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது முன்பு வாரங்கல்லில் நடந்த ஆசிட் தாக்குதல் சம்பவத்தில் சஜ்ஜனார் தலைமையில் நடந்த என்கவுன்டர் பற்றி எடுத்துக் கூறினார்கள். இப்போது பிரியங்கா வழக்கில் எப்படிப்பட்ட தண்டனை பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள் என்று பெண்கள் கண்ணீரோடு கேட்டனர்.

hyd city cop - 2026

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் வாரங்கல் சம்பவம் போலவே என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று அவரை வற்புறுத்தினர்.

அவர்களுக்கு ஆறுதல் கூறிய காவல் ஆணையர் சஜ்ஜனார் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர்களோடு உரையாடினார். சம்ஷாபாத் பகுதியில் பெண்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னையும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வதாக அவர் அவர்களுக்கு உறுதி அளித்தார்.

இந்நிலையில் இன்று காலை அந்த நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதற்கு சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.