திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து செந்துறை என்னும் பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்தை ராமகிருஷ்ணன் என்ற ஓட்டுநர் ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் இவர், வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் பார்த்துக் கொண்டே பேருந்தை ஒட்டியுள்ளார். அதனால், கடுப்பான பயணிகள் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால், ராமகிருஷ்ணன் அதனைக் கேட்க வில்லையாம்.
சுமார் தொடர்ந்து ஒரு 20 நிமிடங்களுக்கு மேலாக ராமகிருஷ்ணன் செல்போன் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டியுள்ளார். இதனால், ஏதேனும் விபத்து நேர்ந்து விடுமோ என்று பேருந்தில் இருந்த அனைவரும் கதிகலங்கி இருந்துள்ளனர்.
ராமகிருஷ்ணன் செல்போன் பார்த்தபடி ஓட்டுவதை, பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலர், ஓட்டுநரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்