கொஞ்சமாவது தன்மானம் இருந்தா.. ! காங்கிரசை கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

Published:

03 June27 Jeyakumar - 2026

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கூட்டணி நீடிக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் என்று டிஆர் பாலு அவர்களும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை என துரைமுருகன் அவர்களும் கூறியதில் இருந்தே இந்த கூட்டணியை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கூறப்பட்டு வருகிறது

கிட்டத்தட்ட மன்னிப்பு கேட்கும் வகையில் தனது அறிக்கைக்கு விளக்கம் கே.எஸ்.அழகிரி அளித்த போதிலும் ப சிதம்பரம் அவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்திய போதிலும் திமுக தரப்பில் இருந்து பாசிட்டிவான பதில்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கருத்து கூறிய போது ‘துரைமுருகனின் கருத்துக்கு பின்னராவது காங்கிரஸ் தன்மானத்துடன் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img