அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்கு மேல் வரக்கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் வீ.வரதராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் வெளியே செல்லலாம் என குறிப்பிட்டுள்ளதை சிலர் தவறாக பயன் படுத்திக் கொண்டு, மாநகரின் பல்வேறு இடங்களில் சுற்றுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ தலைமையில் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை உட்பட பல்வேறு இடங்களில் இன்று தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவல் ஆணையர் வி.வரதராஜூ செய்தியாளர் களிடம் கூறும்போது, “மாநகர் முழுவதும் இன்று காலை முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 295 இருசக்கர வாகனங்கள், 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 11 இடங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பகுதியிலும் மளிகை கடைகள் உள்ளன. எனவே இனிமேல் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வாங்க, தங்களது வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவமனை செல்வோருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாள் மட்டுமே இயங்கும் என்று வேலூர் ஆட்சியர் அறிவித்திருந்தார்.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 45 நபர் எந்த வெளிநாடும்,வெளி மாநிலமும் செல்லாத நிலையில் நேற்று கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளார். மேலும் 10 நாட்களுக்கு தேவையாள மளிகை, 3 நாட்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் மக்கள் அன்றாடம் காய்கறி , மளிகை வாங்க தொடந்து வந்த வண்ணம் உள்ளனர் ஆகவே மக்கள் நளனை கருத்தில் கொண்டு 09.04.2020 முதல் வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர்கள் ஆகிய வாரத்தின் திங்கள், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டுமே இயங்கும்.
அதேபோல் காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் நேரம் குறைக்கப்பட்டு தினசரி காலை 6.00 முதல் காலை 10.00 வரை இயங்கும். மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும். பால் தினசரி காலை 6.00 முதல் காலை 8.00 மணி வரையும். மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரையும் இயங்கும்.
அனைத்து வகை இறைச்சி கடைகளும் ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை. பெட்டிகடைகள், தள்ளுவண்டி கடைகள் சிறிய கடைகள் எனை எதர்க்கும் வீதிவிலக்கு கிடையாது – வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு வெளியிட்டார்.