
சர்வ தேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளி குறித்து ஒவ்வொரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அடிக்கடி அங்குள்ள நிலையை படம் பிடித்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.
பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என தகல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையம் தினமும் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது என்றும் இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 முறை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கின்றனர் என நாசா (NASA) தெரிவித்துள்ளது.
அதாவது தினமும் 45 நிமிடங்கள் இடைவெளியில், சூரியம் உதிக்கிறது மற்றும் அஸ்தமனம் ஆகிறது.
நாசா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) ஒரு ட்வீட்டில் இது தொடர்பான அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விண்வெளி வீரர்கள் வெப்பநிலை வேறுபாட்டை உணர்கிறார்களா என்று ஆச்சரியப்பட்ட ட்விட்டர் பயனர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் வெப்பநிலை வேறுபாடு மிகப் பெரிய அளவில் இருக்கும். சூரிய உதயத்தில், வெப்பநிலை 250 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், சூரிய அஸ்தமனத்தில் -250 பாரன்ஹீட் ஆகவும் இருக்கும். ஆனால் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர், ஏனெனில் அவர்களின் விண்வெளி உடைகள் வெளிப்புற தட்பநிலை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் அல்லது விண்வெளியில் நடப்பதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
The spacewalkers experience a sunrise and sunset every 90 minutes and @cquantumspin asks if they feel temperature differences in their suits. #AskNASA | https://t.co/yuOTrYN8CV pic.twitter.com/R8ZjQcpQyr
— International Space Station (@Space_Station) September 12, 2021