spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எச்சரிக்கை: இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம்!

எச்சரிக்கை: இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸ்அப் முடக்கம்!

- Advertisement -
whatsapp
whatsapp

வாட்ஸ்அப் யூஸர்களுக்கான ஒரு முக்கிய தகவல் இங்கே இருக்கிறது. உங்கள் அக்கவுண்ட் “தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது” (Temporarily banned) என்று ஆப்ஸில் மெசேஜ் வந்திருந்தால், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ App-ற்கு பதிலாக WhatsApp-ன் அன்சப்போர்ட்டட் வெர்ஷனை (unsupported version) பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்காலிகமாக தடை (Temporarily banned) செய்யப்பட்ட பிறகும் ஒரு யூஸர் WhatsApp-ன் அதிகாரப்பூர்வ App-ற்கு மாறவில்லை என்றால், அவரது அக்கவுண்ட் பிரபல மெசேஜிங் சர்வீஸான WhatsApp-ஐ பயன்படுத்துவதிலிருந்து நிரந்தரமாக தடை செய்யப்படலாம்.

உலகளவில் அதிக மக்கள் பயன்படுத்தி வரும் பிரபல மெசேஜிங் பிளாட்ஃபார்மான வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள தகவலின் படி WhatsApp Plus, GBWhatsApp போன்ற அன்சப்போர்ட்டட் ஆப்ஸ்கள் அல்லது உங்கள் WhatsApp சேட்களை தொலைபேசிகளுக்கு மூவ் (move your WhatsApp chats between phones) செய்வதாக கூறும் ஆப்ஸ்கள் WhatsApp-ன் உண்மையான வெர்ஷன்கள் இல்லை.

WhatsApp Plus, GB WhatsApp உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமற்ற ஆப்ஸ்கள். மேலும் இவை தேர்ட் பார்ட்டியால் உருவாக்கப்பட்டு வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை ( terms of service) மீறுகின்றன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் இந்த தேர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை அவற்றின் பாதுகாப்பு நடைமுறைகளை சரிபார்க்க முடியாத காரணத்தால் WhatsApp சப்போர்ட் செய்வதில்லை.

எனவே, வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை தொடரவும், இந்த App-லிருந்து நிரந்தரமாக தடை செய்யப்படுவதைத் தவிர்க்கவும் அதிகாரப்பூர்வ WhatsApp App-ற்கு மாற வேண்டும்.

ஆண்ட்ராய்டில் அதிகாரப்பூர்வ App-ற்கு மாறுவது எப்படி?

ஒருவர் பயன்படுத்தும் அன்சப்போர்ட்டட் ஆப்ஸின் பெயர் chat history-ஐ அதிகாரப்பூர்வ WhatsApp-ற்கு மாற்ற வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறது.

இதற்கு முதலில் More Options பின் Settings அதன் பின் Help இறுதியாக App info செல்வதன் மூலம் குறிப்பிட்ட App-ன் பெயரை கண்டறியவும்.

WhatsApp Plus அல்லது GB WhatsApp மற்றும் இவை இரண்டை தவிர வேறு ஆப்ஸை பயன்படுத்தினாலும் அதிகாரப்பூர்வ WhatsApp-ஐ டவுன்லோட் செய்யும் முன் chat history-ஐ saving செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

chat history-ஐ சேமிக்க மற்றும் ட்ரான்ஸ்ஃபர் செய்ய WhatsApp பின்வரும் வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. எனினும் இது சக்ஸஸாக முடியும் என்பதற்கான உத்தரவாதத்தை நிறுவனம் வழங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

GB WhatsApp பயன்படுத்துபவர்கள்..

எத்தனை நாள் temporary ban செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை டைமர் உங்களுக்குக் காண்பிக்கும். அது முடிவடையும் வரை காத்திருங்கள். முடிந்ததும் More options > Chats > Back up chats செல்லுங்கள். ஃபோன் செட்டிங்ஸ் சென்று Storage > Files என்பதை டேப் செய்யுங்கள்.

GB WhatsApp ஃபோல்டரை கண்டுபிடித்து அதை செலக்ட் செய்ய டேப் செய்து ஹோல்ட் செய்யவும். மேல் வலது மூலையில் காணப்படும் More > Rename and rename the folder to “WhatsApp” என்பதை டேப் செய்து ஃபோல்டரை “WhatsApp” என ரீனேம் செய்யவும்.

பின்னர் Play Store-க்கு சென்று அதிகாரப்பூர்வ WhatsApp டவுன்லோட் செய்து அதில் உங்கள் தொலைபேசி எண்ணை சரிபார்க்கவும். Backup Restore கொடுத்து Next சென்றால் உங்களது பழைய chat-களுடன் WhatsApp லோட் ஆகும்.

WhatsApp Plus பயன்படுத்துபவர்கள்..

உங்கள் chat history முன்பே saved-ஆகி இருந்தால் அது தானாகவே அதிகாரப்பூர்வ WhatsApp-ற்கு மாற்றப்படும். இல்லையெனில், உங்கள் backup chats-களை பின்வரும் முறைகளை செய்வதன் சேமிக்கலாம் WhatsApp Plus> More options > Settings > Chats > Chat backup > BACK UP என்று கொடுக்க வேண்டும். இப்போது, பிளே ஸ்டோருக்குச் சென்று WhatsApp-ஐ டவுன்லோட் செய்து தொலைபேசி எண்ணை சரிபார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe