பூமிக்கு அருகே ராட்சச அளவு கொண்ட சிறுகோள் ஒன்று விரைவில் வரப்போவதாக நாசா சென்டர் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அருகில் ஆபத்தான சிறுகோள் ஒன்று வரப்போவதாக நாசா தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகே அடிக்கடி சிறுகோள்கள் நிறைய கடந்து செல்வது வழக்கம். கடந்த 2017ல் கூட ஒமுஅமுவா என்ற சிறுகோள் வடிவம் கொண்ட சாதனம் ஒன்று பூமிக்கு அருகில் வந்தது. இதற்கு ஒமுஅமுவா என்று பெயர் வைக்கப்பட்டது.
இது பூமி, சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படவில்லை. இதனால் இது ஏலியன் வாகனமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அப்போதே தெரிவித்தனர்.
இப்போதும் இதை பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது இது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இது எப்படி பூமிக்கு அருகில் வந்தது என்றும் தெரியாது.
இது பூமிக்கு மிக அருகில் வந்துவிட்டு சென்றது. அதன்பின் சூரியனை நோக்கி சென்றுவிட்டு, பின் சூரியனை கடந்து வேறு வழியாக சென்றுவிட்டது. இது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக அனைத்தையும் கடந்து மிக மெதுவாக சென்றது.
இந்த நிலையில்தான் பூமிக்கு அருகே ராட்சச அளவு கொண்ட சிறுகோள் ஒன்று விரைவில் வரப்போவதாக நாசா சென்டர் தெரிவித்துள்ளது.
எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை விட இதன் உயரம் 2.5 மடங்கு அதிகம் கொண்டது என்று நாசர் தெரிவித்துள்ளது. இதன் பெயர் 7482 என்று நாசா மூலம் வைக்கப்பட்டுள்ளது.
ராட்சச பாறைகளால் இந்த சிறுகோள் உருவாக்கி இருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது பூமிக்கு அருகில் வர உள்ளது.
ஜனவரி 18ம் தேதி பூமிக்கு அருகில் வர இருக்கிறது. அதாவது இன்னும் 14 நாட்களில் பூமிக்கு அருகில் இந்த சிறுகோள் வர வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.
இது 1.052 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அதோடு இது தன்னை தானே 2.6 மணி நேரத்திற்கு ஒருமுறை முழுவதுமாக சுற்றிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் பிரபல கோல்டன் கிரேட் பாலம் அளவிற்கு இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஆபத்தான சிறுகோள். அபாயகரமான வகையை சேர்ந்தது இது. பூமிக்கு மிக மிக அருகில் பறக்க கூடிய அபாயகரமான சிறுகோள் இது. ஆனால் பூமி மீது இது மோதும் வாய்ப்பு இல்லை. பூமியில் ஈர்ப்பு விசையால் இது ஈர்க்கப்பட வாய்ப்பு இல்லை.
பூமிக்கு மிக அருகில் சென்றாலும் அதிர்ஷ்டவசமாக இந்த சிறுகோளிடம் இருந்து நாம் தப்பித்துவிடுவோம் நாசா தெரிவித்து உள்ளது. இந்த சிறுகோள் ராபர்ட் மேக்நாக்ட் என்ற ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்ச்சியாளர் கடந்த 1994லேயே கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தனை நாட்கள் பூமியை நோக்கி இது நகர்ந்து வந்த நிலையில் தற்போது பூமிக்கு மிக அருகில் கிராஸ் செய்ய இருக்கிறது. அடுத்த 200 வருடங்களுக்கு இதைவிட பூமிக்கு மிக அருகில் வரப்போகும் வேறு சிறுகோள் எதுவும் கிடையாது.
இந்திய நேரப்படி ஜனவரி 19ம் தேதி அதிகாலை 3.21 மணிக்கு இது பூமிக்கு அருகில் வரும். பூமியில் இருந்து 1.93 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இது பூமியை கடக்கும். அதாவது பூமிக்கும் நிலவிற்கும் இடையில் இருக்கும் தூரத்தை விட 5.15 மடங்கு அதிக தூரம் ஆகும்.