உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ், ஒமிக்ரான் வைரஸை சாதாரணமான ‘சளி’ என்று நினைத்து பலரும் அலட்சியமாக இருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்தவர்களும் உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் ஒமிக்ரானை சாதாரணமான சளி என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் சாதாரணமான சளிதானே, சாதாரணமான இருமல் தானே என்று வீட்டிலேயே சுய மருந்து எடுத்துக் கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று உஷார்படுத்தியுள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது. ஆனால் நிபுணர்கள் தரப்பில் ஒமிக்ரான் தாக்கமும், பாதிப்பும் குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் வைரஸ் பரவும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் பலரும் ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவு தானே கவலைப்பட அவசியமில்லை என்று அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
அதேபோல் ஒமிக்ரான் வைரஸ் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தன போக்கும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் ஒமிக்ரான் உலக அளவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மரியா வான் கெர்கோவ் எச்சரித்துள்ளார்.
அதேசமயம் தடுப்பூசிகளால் உயிரிழப்பையும், ஒமிக்ரான் பரவலையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.