காட்டு யானை ஒன்று சுற்றுலா சென்றவர்களின் காரை தலைகீழாக புரட்டிப் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள iSimangaliso Wetland பூங்காவை சுற்றிப்பார்க்க ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் வந்த காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
இதனால் அவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த யானை திடீரென ஆத்திரத்துடன் காரை தனது தும்பிக்கையால் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது.
இதை சற்றும் எதிர்பார்க்காத சுற்றுலா பயணிகள், பயத்தில் அலறியுள்ளனர். ஆனாலும் அந்த யானை, காரை ஏதோ பொம்மைபோல் புரட்டி போட்டுகொண்டு இருந்தது.
இதை கண்ட மற்றொரு காரில் இருந்தவர்கள், ஹாரனை பயங்கர சத்தத்துடன் ஒலிக்க விட்டுள்ளனர். இதனால் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.
இதனை அடுத்து வேகமாக அங்கு சென்று காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் தாய் தந்தை மற்றும் 2 குழந்தைகள் எந்தவித காயமும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.