
பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அப்படிப்பட்ட பாம்பை வீற்றின் சுவற்றில் பார்த்தால் எப்படி இருக்கும்.
அதுவும் செங்குத்தான சுவற்றின் மீது பிரமாண்ட பாம்பு ஊர்ந்து செல்வதை பா்த்த வீட்டில் இருப்பவர்களின் இதயம் ஒரு கணம் நின்றே விட்டது என்றே சொல்லலாம்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் வால் தரையிலும் தலை கூரையின் மீது இருக்கும் பெரிய மலை பாம்பு ஒன்று வீட்டின் சுவரின் மீது ஏற பார்க்கிறது. இநத ராட்சத மலைபாம்பு நீண்ட நேரமாக சுவரின் மீது ஊர்ந்து சென்று கொண்டே இருக்கிறது.
இந்த வீடியோவில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அதே சுவரை கடக்க ஒரு பூனையும் வேகமாக வருகிறது. ஆனால் மிகப்பெரிய மாலை பாம்பு சுவரை கடப்பதை பார்த்து அது திகைத்து போய் அங்கேயே நிற்கிறது. நாமே இந்த பாம்பை பார்த்தால் சற்று திகைத்து விடுவோம் என்றால் பூனைக்கும் எப்படி இருந்து இருக்கும்.
இந்த வீடியோவின் முடிவில் மலைப்பாம்பு சுவரின் உச்சி வரை ஏறுகிறது . இந்த வீடியோவை இதுவரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் பலர் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்சியைக் கண்டு பெரும்பாலானோர் ஆச்சரியமடைந்து உள்ளனர். மேலும் இந்த வீடியோவில் குறுக்கு வரும் பூனை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.