
மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் பல பெண்களால் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும், பெண் தெய்வத்தையே இழிவாக பேசியவருமான கவிஞர் வைரமுத்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எல்லோரும் மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துவரும் நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
சின்மயி இதற்கு சிரிப்பு ஈமோஜியுடன் இவரிடமிருந்து மகளிர் தின வாழ்த்துக்கு எதுவுமில்லை என ட்விட் போட்டுள்ளார்.
கூட பணிப்புரியும் பெண்ணை தவறாக அணுகும் me too வில் சிக்கியவருமான ஒருவர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து இருப்பது காமெடியாக உள்ளது. இந்த கவிதையிலும் ஈர்ப்பை அவர் விடவில்லை😀
பெண்களைக் கொண்டாடும் மகளிர் தினச் செய்தியை, கிட்டத்தட்ட 20 பெண்களால் (+அதற்கும்மேல்) குற்றம் சாட்டப்பட்ட இந்த வேட்டையாடும் குற்றவாளியின் இந்த ட்விட் தேவையா? என் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஆண்டு அவர் அரசியல் கட்சியின் ஆதரவின் காரணமாக அதை ட்விட் செய்துள்ளார். அவர் தன்னை வெள்ளையடித்துக் கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார் எனவும் ஒரு நெட்டிசன் தெரிவித்து உள்ளார்.
கவிதைகளையும், புகழ் வார்த்தைகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடுவது மட்டுமே மகளிரை போற்றுவதா.. உண்மையான போற்றுதல் நடத்தையில் இருப்பது தானே… பெண்ணை, பெண்களை இழிவுப்படுத்தும் செயல்கள் தொடர்சங்கலியாக ஒருபுறமும், கவிதைகளும், பெருமை கூறும் பதிவுகளும் எழுத்தாய் மட்டுமே வெளிவருவதும் வெட்கேடானது என உணர்ந்து செயல்பட வேண்டும் ஆண்கள்.
Nothing like a women’s day wish from this man 😂😂😂https://t.co/wU3Z7429Jv
— Chinmayi Sripaada (@Chinmayi) March 8, 2022
The gall of this predator, offender accused by nearly 20 women (+counting) to post a women's day message celebrating women! This year he has twtd it only cuz of the political party's support. He's taking absolutely every effort possible to whitewash himself🙄#MolesterVairamuthu
— kay (@kflyyt) March 8, 2022