spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அயல்நாட்டில் மருத்துவப் படிப்பும் எதிர்விளைவும்!

அயல்நாட்டில் மருத்துவப் படிப்பும் எதிர்விளைவும்!

- Advertisement -

அயல்நாட்டில் மருத்துவப்படிப்பும் எதிர்விளைவும்:
– சுபாஷ் சந்திரபோஸ் (பேராசிரியர், பணி ஓய்வு)

இந்தியாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மருத்துவம் படிப்பில் அளவுக்கும் தகுதிக்கும் மீறிய மோகம் கொண்டு அயல்நாடுகளுக்கு அனுப்புகின்ற சூழல் பெருகி விட்டது. இதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை யாரும் புரிந்து செயல்படுவது போல் தெரியவில்லை.

தமிழ் நாட்டிலிருந்து ஆண்டுக்கு 40,000 ஆயிரம் மாணவர்களும், இந்திய அளவில் சுமார் 6 லட்சம் மாணவர்களும் அயல்நாடுகளுக்குப் படிக்கச் செல்லுகிறார்கள். மருத்துவம் அல்லாத பிற படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் சென்று நிறைவு செய்து வெளிநாட்டிலும், இந்தியாவிலும் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் இளநிலை மருத்துவப்படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் 2002 ஆம் ஆண்டுக்குள் பின் ரஷ்யா, சீனாவுக்கு அதிக எண்ணிக்கையில் படிக்கசென்றனர்.

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன், ஜார்ஜியா, அர்மேனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகள் வெளிநாட்டு மாணவர்களைக் கவரும் நோக்கில் மருத்துவக்கல்விக் கட்டமைப்புக்களை உருவாக்கினார்கள்.இந்நாடுகள் இந்திய மாணவர் சேர்க்கைக்கு முகவர்களை நியமித்து நாடு முழுவதிலும் விளம்பரம் செய்து கவனிக்க வைத்துவிட்டனர்.

அத்துடன் அந்நாடுகளில் மாணவர் சேர்க்கையில் எளிய நடைமுறை, குறைவான கல்விக்கட்டணம்,குறைந்த மதிப்பெண் எனப் பல வசதிகள் இருந்ததால் 2008 ஆம் ஆண்டுக்குப் பின் மருத்துவம் படிக்க அதிக அளவில் படை எடுத்துச் சென்ற காட்சிகளைத் திருச்சி, சென்னை விமான நிலையங்களில் பார்க்க முடிந்தது.

நீட் தேர்வு வந்த பின் இதன் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி 60,000பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தமிழ் நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. நெட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 520 மதிப்பெண் வாங்கியவர்கள் அரசின் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்து படிப்பை 3-6 லட்சத்துக்குள் முடித்து விடலாம்.

சுயநிதிக்கல்லூரியில் சேர்ந்தால் 60 லட்சம் முதல் 90 லட்சம் வரை செலவு செய்து படிக்க முடிக்க வேண்டியுள்ளது. நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் சேர்ந்தால் ஒன்று முதல் இரண்டு கோடி வரை செலவளிக்க வேண்டும். வெறும் எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டும் இவ்வளவு செய்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்காக வாங்கிய கல்விக்கடன், பெற்றோர் சொத்தை விற்றும் கடன் வாங்கியும் படும்பாடு சோகக்கதையாகி மரணம் வரை போய் விட்டது.

2021 ஆண்டு நடந்த நீட் தேர்வில் BC/ SC வகுப்புனர்களுக்குத் தேர்ச்சி மதிப்பெண்:104 முன்னேறிய வகுப்பினர் தேர்ச்சி மதிப்பெண்:134

108-134 இடையில் மதிப்பெண் எடுத்தவர்கள் மருத்துவம் படிக்க வேண்டுமானால் 2 கோடி பணம் இருந்தால் தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும். எப்படியும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சபதம் எடுத்து விடுகிறார்கள். இச்சேர்க்கை பற்றி கல்வியாளர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை. அப்படியும் சிலருக்கு ஆலோசனை சொன்னாலும் பெற்றோர் ஒத்துக்கொண்டாலும் மாணவர் ஒத்துக்கொள்வதில்லை. இது பல வீடுகளில் நடக்கும் போராட்டமாகி விட்டது.

மருத்தவம் படிக்க ஒரு பிரிவினர் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் போய் 40 லட்சம் செலவில் படிக்கிறார்கள். அங்கு தட்ப வெப்பம் இந்தியா போல் இருப்பதால் பலரும் அங்கு செல்லுகிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சியும் 10, + 2 படிப்பில் 50% மதிப்பெண் எடுத்தவர்கள் முகவர்கள் மூலம் ரஷ்யா, உக்ரைனில் மருத்துவப்படிப்பில் சேர்ந்து 30 லட்சம் செலவில் படித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு சேர்ந்து உள்ளனர். அந்த நாடுகளின் அரசியல் சிக்கல், தட்பவெப்ப நிலைகள், பொருளாதார நிலைப்பாடு , உணவு முறைகள் எதுவும் தெரியாமல் 17 வயதில் சென்றுள்ளனர்.

உக்ரைனில் 15 அரசு மருத்தவப் பல்கலைக்கழங்கள் இருப்பதால் தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து உள்ளனர். ஆனால் ரஷ்யா திடீரென போர் தொடுத்ததால் உக்ரைனில் படித்த இந்திய மற்றும் மாணவர் உணவின்றியும் உயிருக்கும் பயந்தும் வாழும் நெருக்கடி வந்து விட்டது. மத்திய அரசும் மாநில அரசும் பெரும்பாலான மாணவர்களை விமானம் மூலம் கொண்டு வந்து தாயகம் சேர்த்து விட்டார்கள். ஆனால் பீதியும் பயமும் அவர்கள் மனதை விட்டு அகல இன்னும் சில காலம் ஆகும்.

இந்திய மற்றும் தமிழக மாணவர்கள் எத்தனை பேர் எங்கு என்ன படிக்கிறார்கள் என்ற தரவுகள் அரசிடமும், அயலகத் தூதரகங்களிலும் இல்லை. இதனால் மாணவர்களை உக்ரைனில் மீட்பதில் அரசுக்குப் பல சிரமங்கள் இருந்தன. இனி மேல் வெளி நாட்டுக்குப் படிக்கப் போகும் மாணவர்கள் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் படிக்கச் செல்லும் நாட்டிலுள்ள இந்தியதூதரகங்களில் பதிவு செய்து கொள்வது நல்லது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் Foreign Medical Graduates Examination( FMGE) தேர்வு எழுதினால் தான் இந்தியாவில் மருத்துவம் செய்ய முடியும். இந்தத் தேர்வுக்கும் கோச்சிங் வகுப்பில் சேர்ந்து கட்டணம் செலுத்திப்படித்தும் பலரும் தேர்ச்சி பெறாமல். தவித்து வருகிறார்கள்.

சீனாவில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கொரொனா காலத்தில் தாயகம் வந்தவர்கள் திரும்ப நினைத்த போது இந்தியா- சீனா பிரச்சனையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது வருத்தமாக இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க அதிக வாய்ப்புக்களை உருவாக்கலாம். இப்போது இருக்கும் இடங்களில் சிப்ட் முறை கொண்டு வந்து இடங்களை இருமடங்கு உயர்த்தலாம்.

மாநில பல்கலைக்கழகங்கள் அரசு மருத்துவ மனைகளைப் பயன்படுத்தி மருத்துவ படிப்பை நடத்த திட்டமிடலாம்.மருத்துவப்படிப்பை உக்ரைன், சீனாவில் இடையில் விட்டு வந்த மாணவர்களுக்கு அண்டை நாடுகளில் படிப்பைத்தொடர ஏற்பாடு செய்யலாம். போலந்து, ஜார்ஜியா நாடுகளின் அழைப்பை ஏற்றும் பயன்படுத்தலாம்.

இத்தனை சிக்கல் சிரமம் இருக்கும் போது மாணவர்கள், பெற்றோர்கள் மருத்துவம் கிடைக்காத சூழலில் மாற்று படிப்பை இந்தியாவில் படித்து வெற்றி பெற முடியும் என்னும் நம்பிக்கை வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe