அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளியில் சிக்கிய கார் உருண்டு சுழன்று, பின்னர் மீண்டும் சாலையில் இயங்கும் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வைரலாகியுள்ளது.
டெக்சாஸில் உள்ள நெடுஞ்சாலையில் பலத்த சூறாவளி காற்றால் ரிலே லியோன் என்பவரின் கார் தூக்கி எறியப்பட்டது. பலமுறை சுழன்று பல்ட்டியடித்த கார், அதற்கு பின்பு அதிசயமாக மீண்டும் சாலையில் இயங்கும் காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
புயல் காரணமாக இப்பகுதியைத் தாக்கிய இந்த சூறாவளியில் சிக்கி பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது, வீடுகள் மற்றும் சாலைகளும் சேதமானது.
இது தொடர்பாக பேசிய 16 வயதான அந்த காரின் ஓட்டுநர் லியோன், ” நான் உயிர் பிழைத்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வீடியோக்களைப் பார்க்கும்போது, அது நான்தானா என சந்தேகமாக உள்ளது.
ஒருவேளை நான் அங்கு இருந்திருக்காமல் இருந்திருக்கலாம் என்பது போல் இருக்கிறது, கடவுளுக்கு நன்றி
வீடியோவில், நான் ஓட்டிச் சென்றது போல் தெரிகிறது, ஆனால் உண்மையில் நான் அவ்வாறு செய்யவில்லை.
நான் சாலையின் மையத்தில் காரை தரையிறங்கினேன், சாலையில் மீண்டும் வருவதற்காக நான் ஓட்டிக்கொண்டிருந்தேன் ‘என்று கூறினார்.
லியோன் வாட்பர்கரில் நடந்த ஒரு வேலைக்கான நேர்காணலில் இருந்து வீடு திரும்பியபோது இந்த சூறாவளியில் சிக்கினார்.
இந்த அதிசய வீடியோ வைரலான பிறகு ஃபோர்ட் வொர்த்தில் உள்ள கார் டீலர்ஷிப் புரூஸ் லோரி செவ்ரோலெட், சேதமடைந்த காருக்குப் பதிலாக 2022 ஆம் ஆண்டு அறிமுகமான புதிய மாடல் காரான ரெட் செவி சில்வராடோவை லியோனுக்கு வழங்கியது.
தற்போது நேர்காணலுக்கு சென்ற லியோனுக்கு அந்த வேலையும் கிடைத்துவிட்டது.