ஸ்ரீவல்லி பாடலுக்கு ஸ்டெப் போட்ட கங்குலி!

அடடே... அப்படியா? சற்றுமுன் விளையாட்டு

புஷ்பா’ படம் வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும் இப்படத்தின் பாடல்களும், டயலாக்குகளும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நடனமாடி வருகின்றனர். இவர்கள் நடனமாடுவது மட்டுமல்லாது பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் புஷ்பா படத்தில் ஹிட்டான ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு அதன் ஹைலைட்டான ஸ்டெப்பை போட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த ரீல்ஸ்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, விராட் கோலி, ஷாகிப் அல் ஹசன் போன்ற பல வீரர்கள் நடனமாடிய நிலையில் தற்போது இந்த ஸ்ரீவல்லி பாடலுக்கு பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நடனமாடி ட்ரெண்டாகி இருக்கிறார்.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுடன் இணைந்து இப்பாடலுக்கு ஸ்டெப்பை போட்டுள்ளார்.

இவர் இதுபோன்று இந்த ட்ரெண்டிங் படத்தின் சில அசைவுகளை செய்வது முதல்முறையல்ல, ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்ட போட்டியாளர் ஒருவருடன் புஷ்பா படத்தின் புஷ்பராஜ் பேசும் டயலாக்கை ஹிந்தியில் பேச சொல்லி கேட்டார்.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த ‘புஷ்பா’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரியளவில் வணிக ரீதியில் வெற்றிபெற்ற படமாக மாறியுள்ளது.

நாளுக்கு நாள் ஒவ்வொரு ரசிகர்களும், பிரபலங்களும் இப்படத்தின் பாடல்கள் அல்லது டயலாக்குகளை ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட பத்தாயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Leave a Reply