இளங்கோவன் வாயைத்திறந்தா போதும்,நமக்கு ஓட்டு அதிகமாகும்-அண்ணாமலை..

Published:

500x300 1833311 annamalais - 2026

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயைத்திறந்தால் போதும், நமக்கு ஓட்டு அதிகரித்துக்கொண்டே வரும் என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அவர்‌

மேலும் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடுபடுவோம்.

அடுத்து கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. அங்கு எனக்கு தேர்தல் குழு பணி கட்சி சார்பில் போடப்பட்டுள்ளது.

இருந்தாலும், ஈரோட்டில் அதிக நேரத்தை செலவிடுவதாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனிடம் தெரிவித்திருக்கிறேன். அந்தவகையில் ஈரோடுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன்.

இலங்கை பயணத்தை முடித்த பிறகு களத்தில் இறங்குவேன். நிச்சயமாக பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவின் போது பார்ப்பீர்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார். அதில் எங்களுக்கு கடுகளவு கூட சந்தேகம் இல்லை. கூட்டணி தர்மத்தின்படி, கட்சி வேட்பாளரை களம் இறக்கியுள்ளோம். அவரை வெற்றி பெறச்செய்ய வைப்பது தார்மீகக்கடமை. அதனை பா.ஜ.க. நிச்சயம் செய்யும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில்தான் தி.மு.க.வினர் அனைவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆளுங்கட்சி பயந்து, ஒரு இடைத்தேர்தலை தமிழக வரலாற்றில் இதுபோல் சந்தித்தது கிடையாது. இதன் மூலம் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் பயம் வந்துவிட்டது என்றே தெரிகிறது.

ஈரோட்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயைத்திறந்தால் போதும், நமக்கு ஓட்டு அதிகரித்துக்கொண்டே வரும். அந்தவகையில் எங்கள் கூட்டணிக்கு பிரசார பீரங்கியே அவர்தான். இளையராஜாவை திட்டிவிட்டார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். அவரால் சும்மா இருக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img