6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..

Published:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கார்த்திக் உள்பட தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம் ஆகியோர் கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

மயிலட்டி துறைமுகம் பகுதிக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வருகிறது. மேலும் விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து கொள்வதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த மீனவர்கள் இதனை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Indian Fishermen 644x362 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img