1727796 thiruvannamalai girivalam - 2026

திருவண்ணாமலையில் நாளை ஆனி பௌர்ணமி கிரிவலம்..

சற்றுமுன்

திருவண்ணாமலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது

1727796 thiruvannamalai girivalam - 2026

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.