வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.
வாட்ஸ்அப் Settings-இல் உள்ள Linked Device அம்சம், சோதனை முயற்சியாக பீட்டா பயனர்களுக்கும் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. இந்த லிங்க் டிவைஸ் சேவையை சிஸ்டமில் உபயோகிப்பது அதிகரித்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
மல்டி டிவைஸ் சப்போர்ட் மூலம், லேப்டாப், டெஸ்க்டாப் என 4 சாதனங்களில் ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் வெப் உதவியுடன் பயன்படுத்தலாம். இதில் சிறப்பு அம்சம்மாக, இந்த சாதனங்களில் பயன்படுத்த, பிரைமரி போனில் இன்டர்நெட் ஆன்-இல் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
எளிதாக சொல்லவேண்டுமென்றால், வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த மொபைலை நம்பியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் 14 நாள்கள் மொபைலில் வாட்ஸ்அப் உபயோகிக்காமல் இருந்தால் மட்டுமே, லிங்க்டு டிவைஸ் கனக்ஷன் கட் ஆகும். இந்த அம்சம் மூலம், ஒரே நேரத்தில் 5 சாதனங்கள் வாட்ஸ்அப்பை உபயோகிக்கலாம்.
வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் முறை
டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் பிரவசரில் web.whatsapp.com தளத்தை ஒப்பன் செய்ய வேண்டும். பயனர்கள் ஸ்கேன் செய்யும் குறியீட்டின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, Code Verify extension-வும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் செயலியில் உள்ள மூன்று டாட் மெனுவை கிளிக் செய்ய வேண்டும். அதில், Linked Device ஆப்ஷன் தோன்றும். அதே ஐஓஎஸ் பொறுத்தவரை, Settings-இல் Linked Device ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும்.
Linked Device கிளிக் செய்ததும், Code ஸ்கேன் செய்ய கேட்கும். நீங்கள் மொபைலில் உள்ள code-ஐ, சிஸ்டமில் காட்டி ஸ்கேன் செய்தால் போதும், வாட்ஸ்அப் வெப் ஓப்பன் ஆகிவிடும்.
குறிப்பு: இந்த டிவைஸ் லிங்க் சமயத்தில், மொபைல் மற்றும் சிஸ்டமில் இன்டர்நெட் ஆன்-இல் தான் இருக்க வேண்டும். இதற்கு பின்பு, நீங்கள் சிஸ்டமில் வாட்ஸ்அப் வெப் உபயோகிக்க, மொபைல் இன்டர்நெட் தேவை கிடையாது.
வாட்ஸ்அப் லிங்க் சக்சஸ் ஆனதும், உங்கள் சமீபத்திய சாட்டின் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட நகல், புதிதாக இணைக்கப்பட்ட சாதனத்திற்கு அனுப்பிவிடுகிறது. இதனால், உங்கள் பழைய சாட்டையும் அதில் காண முடியும்.
ஆனால், சில சமயங்களில் அனைத்து மெசேஜ்களையும் வாட்ஸ்அப் வெப்பில் காண முடியாது. முழு சாட் ஹிஸ்டரி பார்க்க மொபைலுக்கு தான் செல்ல வேண்டும்.