விஜயதசமீ… ஏன்? எதற்கு?

Published:

kanchi perumal utsav - 2026

விஜய தசமீ ! விஜய தசமீயன்று அபராஜிதையை (ஸ்ரீ மஹாலக்ஷ்மி- ஒருவராலும் வெல்லப்பட முடியாதவள் ) வழிபடவேண்டும் என்று தர்ம சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !

எல்லையைத் தாண்டுவது, வன்னி மரத்தை வணங்குவது, தேசாந்தரங்களுக்குப் பயணம் போன்றவைகள் இந்நன்னாளில் செய்யத் தகுந்தனவாம் !

அபராஜிதையை வழிபடும் அரசர்கள், ” யாத்ராயாம் விஜய ஸித்த்யர்த்தம் ” என பூஜை ஸங்கல்பத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் !

ஹாரேண து விசித்ரேண பாஸ்வத் கநக மேகலா |
அபராஜிதா பத்ரதா கரோது விஜயம் மம ||

என்கிற மந்த்ரத்தை வெற்றியை விரும்பும் அரசன் சொல்ல வேண்டியது !

ஊருக்கு வெளியில் ஈசான திசையில் வன்னி மரத்தை பூசிக்க வேண்டியது .. ஊர் எல்லையை பூசைக்கு முன்போ அல்லது பின்போ தாண்டலாம் ..

புரோஹிதர்களையும் மந்திரிப் பிரதானிகளையும் முன்னிட்டுக் கொண்டு அரசன் தன் குதிரை மீதமர்ந்து , வன்னி மரத்தின் அருகே சென்று , கீழிறங்கி ஸ்வஸ்தி வாசன பூர்வகமாக வன்னியை பூசிக்க வேண்டும் !

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
kanchi perumal utsav2 - 2026

மம துஷ்க்ருத அமங்கலாதி நிரஸநார்த்தம் க்ஷேமார்த்தம் ” யாத்ராயாம் விஜயார்த்தம் ” ச ஷமீ பூஜாம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் !

( என்னுடைய பாபங்கள், அமங்களங்கள் இவைகளை போக்கிக் கொள்ளவும் , நன்மைக்காகவும், யாத்திரையில் வெற்றிக்காகவும் இந்த வன்னி மரத்தை வணங்குகிறேன் )

அமங்களானாம் ஷமனீம் ஷமனீம் துஷ்க்ருதஸ்ய ச ; து:க்க ப்ரணாசினீம் தந்யாம் ப்ரபத்யேஹம் ஷமீம் சுபாம் ||

( அமங்களங்களையும் பாபங்களையும் அழிப்பதாய், துன்பங்களைப் போக்குவதாய், எல்லா வகைகளிலும் சிறந்ததாயுமுள்ள சுபமான வன்னியை வணங்குகிறேன் )

என்கிற மந்திரத்தைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும் !

ஸ்ரீ ராமனே இப்பூசையை செய்திருப்பதாக பின் வரும் ச்லோகம் உரைப்பதையும் காண்போம் !!

” கரிஷ்யமாண யாத்ராயாம் யதாகாலம் ஸுகம் மயா | தத்ர நிர்விக்ந கர்த்தா த்வம் பவ ஸ்ரீ ராம பூஜிதே || “

இஷ்டமானதைப் பார்ப்பதற்கும்,/ அடைவதற்கும் ,சத்ருக்களின் விநாசத்திற்கும் இப்பூஜை ஆவச்யகமாகும் !!

அச்மந்தக மஹாவ்ருக்ஷ மஹாதோஷ நிவாரண |

இஷ்டாநாம் தர்சனம் தேஹி சத்ரூணாஞ்ச விநாசனம் ||

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

என்று ப்ரார்த்திக்க வேண்டும் !

எதிரியின் உருவத்தை, பிம்பத்தைச் சமைத்து, அரசன் தன் அம்புகளால் அதனை வீழ்த்த வேண்டும் ..

அதற்கு பதிலாக வன்னி மரத்தில் அம்பெய்வதும் சாத்திரங்களின்படிச் சரியே !!

வாத்தியங்களுடனும் , ஆடல் பாடல்களுடனும் இப்பூசை விமரிசையாகச் செய்யப்பட வேண்டியது !

அரசனின் நன்மையை விரும்புவோர் அச்சமயம் உடனிருக்க வேண்டும் !

கோயில்களில் அச்சமயம் செந்தமிழ் பாடுவார்களும், வடமறை வல்லுனர்களும் எம்பெருமானைச் சூழ்ந்திருப்பது அவனது நன்மையை வேண்டியன்றோ !

நால் திசையிலும் நம் தேவுக்கு வெற்றியே வசமாகட்டும் என்கிற காரணம் பற்றியே , நாற்புறமும் அம்பெய்வது ..

சதுர் திக் விஜயார்த்தம் பாண சதுஷ்டயம் ப்ரயுஜ்ய .. என்று பாத்ம தந்த்ரத்தில் ( ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் ) ப்ரமாணம்

விஜய முஹூர்த்தத்தில் தேசாந்தர கமனம் (வெளி தேசங்களுக்கு – ஊர்களுக்கு) செல்ல வேண்டும் .. சாத்திரங்களின் கட்டளைப்படி இவைகள் செய்யப் பெற்றிருந்தால் வெற்றி நிச்சயம் !!! ????

  • கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி
  • படங்கள்: வி.என்.கேசவபாஷ்யம்
ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img