விஜயதசமீ: முதல் ரஃபேல் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் ‘சஸ்த்ர பூஜை’!

Published:

rajnath singh france - 2026

விஜயதசமீ நாளான இன்று இந்திய விமானப் படை தனது 87வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறது.

இந்த நாளில், இன்னொரு சிறப்பம்சமாக இந்திய விமானப் படைக்கு, மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் சேர்வதற்கான பிள்ளையார் சுழியாக, முதல் விமானத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சஸ்த்ர பூஜையை, அதாவது ஆயுத பூஜையை நடத்துகிறார்.

இந்திய விமானப் படைக்கு ரபேல் ரக விமானங்களை வாங்க ஐரோப்பிய நாடான பிரான்சின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து இந்தியாவிடம் ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் ரஃபேல் ரக போர் விமானம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லி விமான நிலையத்தில் இருந்து திங்கள் நேற்று பாரிஸ் சென்றடைந்தார். பாரீஸில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையான சஸ்த்ர பூஜை கொண்டாடப் படும் நாளில், ரஃபேல் விமானத்துக்கும் சஸ்த்ர பூஜை நடத்தி ராணுவத்தில் சேர்க்க ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த தினத்தில் இந்திய விமானப் படை தனது 87வது தினத்தைக் கொண்டாடுவதை ஒட்டியும், இந்த நடவடிக்கையில் ராஜ்நாத் சிங் இறங்கியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img