December 5, 2025, 7:47 PM
26.7 C
Chennai

கொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க!

swl-meet1
swl-meet1

உலகெங்கும் இப்போது கோவிட் வைரஸ் பரவல் காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப் பட்டு, பல்வேறு நாடுகளிலும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், வயதானவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தனிமை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக நாளையும் மறுநாளும் இரு நாட்கள் மெய்நிகர் உச்சிமாநாடு (விர்சுவல் சம்மிட்) ஒன்று நடைபெறுகிறது. இதில், உலகம் முழுதிலும் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் பயனடைவர். மனநல சுகாதாரத்தைப் பேணவும், மன அழுத்தத்தை சமாளிக்கும் நுட்பங்களை ஊக்குவிப்பதிலும் இந்த இரு நாள் மாநாடு உதவிபுரியும்.

இதற்கு 50 உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மெய்நிகர் மாணவர் ஆரோக்கியம் மற்றும் தலைமை ( virtual student wellness and leadership (SWL) summit) உச்சிமாநாட்டை நடத்துகிறார்கள்.

இவர்கள், மனநலம் பேணுவது குறித்து உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். , அமெரிக்காவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்தும், ஐ.நா. ஆரோக்கிய இலக்குகளுக்காக ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் யுனெஸ்கோ இருக்கை உடன் இணைந்தும் SWL செயல்படுகிறது.

தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து 74%க்கும் மேற்பட்ட வயதானவர்கள் COVID-19 தொற்றுநோயின் விளைவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மோசமான மனநலச் சிதைவு அறிகுறிகல் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்காக உள்ள பிரத்யேக ஹாட்லைனில் அளிக்கப் பட்டுள்ள குறுஞ்செய்தி புகார்கள், 1000% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மன அழுத்தத்தின் களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில் அவர்களுக்கு நேர்மறையான மனநலப் பழக்கங்களை வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நன்றாக உணரலாம்.

இளைஞர்களைப் பொறுத்தவரை, இந்த கோவிட் 19 தொற்றுநோய் அவர்களின் மன அழுத்த அளவிலும் பதட்டத்திலும் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பதின்ம வயதினர் 1500 பேரிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், அவர்களில் 10ல் 7 பேர் தங்கள் மனநலனுடன் ஏதேனும் ஒரு வடிவத்தில் போராடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் 45% பேர் தொற்றுநோய் மற்றும் தொடர்புடைய அழுத்தங்களின் விளைவாக, வழக்கமாக செயல்படுவதை விட அதிக மன அழுத்தத்தை உணர்ந்துள்ளனர். குறிப்பாக, 61% பேர் தொற்றுநோயின் விளைவாக அவர்களின் தனிமை வலி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த விர்ச்சுவல் மாநாடு உலகெங்கிலும் உள்ள 100,000க்கும் மேற்பட்ட மக்களை இணைக்கும்! இம்போஸ்டர் சிண்ட்ரோம், மனநலம் 101, நீங்கள் உணரும் விதத்தை உணர்வது சரியானதே, இளமை பருவத்தில் மனநல சவால்களை வழிநடத்துவது மற்றும் பள்ளியிலும் வீட்டிலும் மன ஆரோக்கியம் குறித்த விவாதத்தை எவ்வாறு உருவாக்குவது? ஆகிய தலைப்புகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

swl-meet
swl-meet

டாக்டர் ஜேம்ஸ் ஆர். டோட்டி, ஒய்.எம்.எச் திட்டத்தின் நிறுவனர் ராண்டி சில்வர்மேன் மற்றும் ‘நோ லெட்டிங் கோ’வின் எழுத்தாளர் / தயாரிப்பாளர், டாக்டர் பார்த்தா நந்தி, எம்மி விருது பெற்ற நிகழ்ச்சி, டாக்டர் நந்தி ஷோ மற்றும் ஹார்ட்ஃபுல்னஸ் தூதர் லேகா டேவ் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக இதில் கலந்து கொள்கின்றனர்.

SWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் www.swlmovement.org/register இல் பதிவு செய்யுங்கள்.
இதனை எஸ்.டபிள்யூ.எல் இயக்கத்தின் இணை நிறுவனர் லயா ஐயர் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories